ஊட்டி : ''மாநிலத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் வாயிலாக இதுவரை, 73 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. 171 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.நிகழ்ச்சியில், மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:
இதுவரை, 57 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 73 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் பங்கேற்பவர்களுக்காக, ஆண்டுக்கு, 25 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் நடந்த முகாமில், 4,000 பேர் பங்கேற்றனர். அதில், 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 550 பேரை தேர்வு செய்து, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் அம்ரித் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement