நள்ளிரவில் தவற விட்ட நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

Added : மே 13, 2022 | |
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டியில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் தவறவிட்ட, 9 சவரன் நகையை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 45; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இரவு 10:00 மணிக்கு, பண்ருட்டி - சென்னை சாலையில்
 நள்ளிரவில் தவற விட்ட நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

பண்ருட்டி: பண்ருட்டியில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் தவறவிட்ட, 9 சவரன் நகையை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 45; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இரவு 10:00 மணிக்கு, பண்ருட்டி - சென்னை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் போடுவதற்காக காரை நிறுத்தினர். அப்போது, டிரைவர் ஞாபக மறதியில், காரின் டிக்கியையும் திறந்து விட்டார். இதை அறியாமல் கார் கிளம்பி சென்றது. பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகே சென்ற போது, பின்னால் வந்த இன்னொரு காரின் டிரைவர், டிக்கியிலிருந்து பொருட்கள் விழுந்ததை கூறி உஷார்படுத்தினார். உடனே காரை நிறுத்தி, டிக்கியில் இருந்த லக்கேஜை பார்த்த போது, ஒரு பேக் மட்டும் காணாமல் போனதையும், அதில், 9 சவரன் நகை இருந்ததையும் அறிந்து, காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அந்த வழியே நடந்து சென்ற ஒருவர், கீழே கிடந்த பேக்கை எடுத்து, திறந்து பார்க்காமல், பக்கத்தில் உள்ள, ஏ.டி.எம்., காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு சென்றது தெரிந்தது.அந்த காவலாளியும் அந்த பேக்கை திறந்து பார்க்காமல் அப்படியே வாங்கி வைத்துக் கொண்டார். நள்ளிரவு 12:00 மணிக்கு அந்த ஏ.டி.எம்.,மிற்கு விரைந்த போலீசார், காவலாளியிடம் இருந்த பேக்கை கைப்பற்றி சோதனையிட்டதில், நகைகள் பத்திரமாக இருந்தன. அவற்றை போலீசார், அப்துல் ரகுமான் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X