கட்டி முடிக்கப்பட்ட 1,406 வீடுகள் ஒப்படைப்பதில் குழப்பம்!

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (7)
Advertisement
காஞ்சிபுரம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 1,406 வீடுகளில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை தலா 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் வெறும் மூன்று பேர் மட்டுமே பங்களிப்பு தொகை செலுத்தி உள்ளனர். மீதமுள்ள 1,403 இதுவரை பணம் செலுத்தவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் இரு திட்டங்களில் புதிய வீடுகள்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 1,406 வீடுகளில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை தலா 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் வெறும் மூன்று பேர் மட்டுமே பங்களிப்பு தொகை செலுத்தி உள்ளனர். மீதமுள்ள 1,403 இதுவரை பணம் செலுத்தவில்லை.



latest tamil news




காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் இரு திட்டங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், முதல் திட்டத்தில் கட்டப்படும், 420 வீடுகளுக்கு தலா 3.65 லட்ச ரூபாயும், திட்டம் இரண்டில், 332 வீடுகளுக்கு தலா 4 லட்சம் ரூபாயும் பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். இதனால் பயனாளிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், மார்ச் மாதம் 2ம் தேதி வெளியிட்ட அரசாணைப்படி, மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.


23 உறுப்பினர்கள்


அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, போலீஸ் எஸ்.பி., நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர்கள், மாநகராட்சி கமிஷனர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் பிற துறை அதிகாரிகள் என, 23 பேர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இக்குழுவின் முதல் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


latest tamil news



கீழ்கதிர்பூர் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2,112 வீடுகளில், வேகவதி ஆற்று பகுதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு 1,406 வீடுகள் வழங்கப்பட உள்ளன.இந்த 1,406 பேரும், பங்களிப்பு தொகை தலா, 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், வெறும் மூன்று பேர் மட்டுமே பங்களிப்பு தொகை செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 1,403 இதுவரை பணம் செலுத்தவில்லை.

வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பொதுமக்கள் பங்களிப்பு தொகை இதுவரை வசூலிக்க முடியாமல், வீடுகளை ஒப்படைக்காத நிலை நீடிக்கிறது.

சாலமங்கலம் கிராமத்தில் இரண்டு திட்டங்களாக, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், முதல் திட்டத்தில் கட்டப்படும், 420 வீடுகளுக்கு தலா 3.65 லட்ச ரூபாயும், திட்டம் இரண்டில், 332 வீடுகளுக்கு தலா 4 லட்சம் ரூபாயும் பயனாளிகள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.

கீழ்கதிர்பூர் கிராமத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வெறும், 1.5 லட்ச ரூபாயே வசூலிக்க முடியாத வாரியத்தால், 4 லட்சம் ரூபாய் வரை பயனாளிகளிடம் எவ்வாறு வசூலிக்க முடியும் என கேள்வி எழுந்துள்ளது.சாலமங்கலம் குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் பெற உள்ள பயனாளிகள் பெரும்பாலும், மணிமங்கலம் ஏரியில் ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். அவர்களில், 369 பேர் இதுவரை பணம் செலுத்தவில்லை.


பரிசீலனை


அதேபோல், சாலமங்கலம் கிராமத்தில் கட்டப்பட உள்ள திட்டம் இரண்டில், 332 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பயனாளிகள் பட்டியலும், இன்னும் தயாராகவில்லை.அதேசமயம், குறைந்த பங்களிப்பு தொகையே செலுத்தாத ஆக்கிரமிப்பாளர்கள், 4 லட்சம் ரூபாய் செலுத்த கூறுவது, இத்திட்டத்தை மேலும் தாமதப்படுத்தும்.
ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து காலி செய்ய உள்ள குடும்பங்களுக்கும், புதிய வீடுகள் கட்டி தருவது அவர்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி தந்தாலும், பங்களிப்பு தொகை மிக அதிகமாக உள்ளதாகவும், பங்களிப்பு தொகையை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
13-மே-202217:07:10 IST Report Abuse
visu எல்லா வீடுகளையும் மாத வாடகைக்கு விடுங்கள் யாருக்கும் சொந்தம் என்றில்லாவிட்டால் உண்மையான ஏழைகள் மட்டும் பயன் பெறுவார்கள்
Rate this:
Cancel
13-மே-202216:23:39 IST Report Abuse
ராஜா இது எடப்பாடியார் காலத்து திட்டம். திமுக பயனாளிகளுக்கு கொடுக்க உள்ளடி வேலை நடைபெறுகிறது.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
13-மே-202215:47:16 IST Report Abuse
Manguni எதற்கு இலவசம்? சுதந்திர போராட்ட தியாகிகளை? ஆக்கிரமிப்பு வாதிகளை சுட்டு தள்ளுங்கள் இல்லை சிறையில் அடையுங்கள். அதை விட்டுட்டு இலவசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X