மின்வாரிய ஊழியர் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு

Added : மே 13, 2022
Advertisement
தியாகதுருகம்: வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மகன் புகழேந்தி பி.டெக்., படித்துள்ளார்.இவருக்கு பணம் கொடுத்தால், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக எலவனாசூர்கோட்டை

தியாகதுருகம்: வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மகன் புகழேந்தி பி.டெக்., படித்துள்ளார்.இவருக்கு பணம் கொடுத்தால், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக எலவனாசூர்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணி புரியும் தியாகதுருகம் நடுத் தெருவைச் சேர்ந்த சக்திவேல், 45; மற்றும் போர்மேனாக பணிபுரியும் ரங்கராஜன், 52; ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய ராஜேந்திரன், கடந்த 2019 ஜனவரி 4ம் தேதி சக்திவேல் மற்றும் ரங்கராஜன் ஆகியோரிடம் 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தியதால் பணத்தை திருப்பித் தருமாறு ராஜேந்திரன் கேட்டுள்ளார்.இரு தவணைகளாக 6 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கேட்டபோது இருவரும், ராஜேந்திரனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் ஆன்லைனில் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், விசாரணை நடத்தாததால், கள்ளக்குறிச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.கோர்ட் உத்தரவின் பேரில், சக்திவேல் மற்றும் ரங்கராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X