கோவை: ''நாட்டின் எழுச்சிக்காக மாணவர்கள் தேசிய உணர்வுடன் செயல்பட வேண்டும்,'' என, கவர்னர் ரவி அறிவுரை கூறினார்.
பாரதியார் பல்கலையின், 37வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க கவர்னர் ரவி நேற்று கோவை வந்தார். கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின், மூலிகைப் பண்ணையை பார்வையிட்டார்.தொடர்ந்து, துணைவேந்தர் காளிராஜ் உடன் கலந்துரையாடினார்.
மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
பல்கலையின் பல்வேறு துறை மாணவர்கள் மத்தியில் கவர்னர் ரவி பேசுகையில்,''நாட்டு நலனில் அக்கறை கொண்டு, நாட்டின் எழுச்சிக்காக மாணவர்கள் தேசிய உணர்வுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கை, தைரியம் இருக்க வேண்டும்,'' என்றார். மாற்றுத்திறன் மாணவர்களை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தார். பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கு பின், உறுப்பு கல்லுாரிகளின் முதல்வர்களுடன் கலந்துரையாடினார். பயோடெக்னாலஜி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். பல்கலை விளையாட்டு துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்ட கவர்னர் அதில் நடத்தப்படும் போட்டிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE