தக்காளி கிலோ ரூ.75; மழையால் விலை 'ஜிவ்'

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (6)
Advertisement
பொள்ளாச்சி: ள்ளாச்சி பகுதியில் தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ, 75 ரூபாய்க்கு விற்பனையானது.பங்கு சந்தையை விட அதிக ஏற்ற தாழ்வுகளை கொண்டதாக தக்காளி சந்தை விலை உள்ளது. சில மாதங்களுக்கு முன், மழை பொழிவு அதிகரித்து, தாக்காளி சாகுபடி பாதித்து, மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. அப்போது, ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.தக்காளி விலை உயர்வை, தங்கம் விலை உயர்வுடன் ஒப்பிட்டு,

பொள்ளாச்சி: ள்ளாச்சி பகுதியில் தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ, 75 ரூபாய்க்கு விற்பனையானது.பங்கு சந்தையை விட அதிக ஏற்ற தாழ்வுகளை கொண்டதாக தக்காளி சந்தை விலை உள்ளது. சில மாதங்களுக்கு முன், மழை பொழிவு அதிகரித்து, தாக்காளி சாகுபடி பாதித்து, மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. அப்போது, ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.தக்காளி விலை உயர்வை, தங்கம் விலை உயர்வுடன் ஒப்பிட்டு, விவாதமே நடந்தது. உணவில் தக்காளி சேர்த்துக்கொள்பவர்கள், வசதியானவர்கள் என்பது போன்று, சமூகவலைதளங்களில் 'மீம்ஸ்' பரவியது. தக்காளி விலை உயர்வால், மக்கள் பாதித்த நிலையில், தக்காளி உற்பத்தி இல்லாததால், விவசாயிகளும் கவலை அடைந்தனர்.அதன்பின், தக்காளி வரத்து அதிகரிக்கும் போது, விலைச்சரிவு ஏற்பட்டு, கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.latest tamil newsபொள்ளாச்சி வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியப்பகுதிகளில், அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தக்காளிக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை; பறித்து சந்தைக்கு கொண்டு சென்றால், செலவுக்கு கூட கட்டுப்படியாகாது என விவசாயிகள் செடியிலேயே பறிக்காமல் விட்டனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தடாலடியாக அதிகரிக்க துவங்கியது. தற்போது, மார்க்கெட்டில் கிலோ, 75 ரூபாய்க்கு விற்கப்படுவதால்மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் அக்னி நட்சத்திர காலத்தில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையால், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்கும் போது, மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'மழை காலம் துவங்கியதும், காய்கறிகள் விலை படிப்படியாக உயர துவங்கியது. தற்போது, மூன்று லோடு தக்காளி வர வேண்டிய கடைகளுக்கு, ஒரு லோடு மட்டுமே வரத்து உள்ளது. இதனால், விலை உயர்ந்து வருகிறது,' என்றனர்.

கிணத்துக்கடவை சேர்த்த தக்காளி விவசாயி துரைமுருகன் கூறுகையில், ''கோடை வெயிலால் ஏற்கனவே, தக்காளி பயிர் வளர்ச்சி, உற்பத்தி இரண்டும் பாதித்திருந்தது.இந்நிலையில், எதிர்பாராத மழையால், தக்காளி செடிகள் பாதித்துள்ளன. தண்டு அழுகல், காய் அழுகலால், உற்பத்தி பாதித்துள்ளது. தோட்டங்களில், 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி, 800 - 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-மே-202218:13:12 IST Report Abuse
bal மழையால் அல்ல தொலைக்காட்சிகளில் கூவி கூவி சொல்கின்றனர்..விலை என்ற போகிறது என்று..
Rate this:
Cancel
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202217:30:58 IST Report Abuse
anuthapi இதற்க்கு ஒன்றிய அரசுதான் காரணம். எங்கள் கருணாநிதி நாடு முதல் அமைச்சர் காரணம் இல்லை. வணிகர் சங்க தலைவர் vikrama ராஜாவும் காரணம் இல்லை. லுளு லூலூ market வந்தால் எல்லாம் சரி ஆகிவிடும். எங்கள் தலைவர் 100 வருடத்தில் செய்ய வேண்டியதை ஒரு வருடத்தில் சாதனை செய்து விட்டார்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-மே-202215:18:31 IST Report Abuse
Darmavan வேளாண் சட்டம் கொண்டுவர ஏன் இப்போது போராட்டம் நடத்தக்கூடாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X