12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (13.5.2022 - 19.5.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் வாரத்தின் முற்பகுதியில் செவ்வாய், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். துர்கையை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.அசுவினி: திங்கள் கிழமைவரை உங்கள் செயல்களில் முன்னேற்றம் இருக்கும், அதன்பிறகு
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் கன்னி, விருச்சிகம், தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (13.5.2022 - 19.5.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


வாரத்தின் முற்பகுதியில் செவ்வாய், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். துர்கையை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.

அசுவினி: திங்கள் கிழமைவரை உங்கள் செயல்களில் முன்னேற்றம் இருக்கும், அதன்பிறகு நெருக்கடிகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். எச்சரிக்கையுடன் செயல்பட நன்மை உண்டாகும்.

பரணி: புதிய நண்பர்களால் வரவுகள், ஆதாயம் என்று ஏற்பட்டாலும் அதன் வழியே பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கார்த்திகை 1ம் பாதம்: குடும்பத்தினர் வழியே செலவுகள் அதிகரிக்கும். இடம், வீடு வாங்குதல் பற்றிய சிந்தனை மேலோங்கும். வாரத்தின் இறுதியில் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். உங்கள் நேர்மையான செயல்களில் நன்மைகளைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம்: 16.5.2022 காலை 8:21 மணி - 18.5.2022 காலை 11.01 மணி


ரிஷபம்


சுக்கிரன்,குரு, கேது நன்மைகளை வழங்குவார்கள். விநாயகர் வழிபாடு தடைகளை விலக்கும்.


latest tamil news


கார்த்திகை 2, 3, 4: உத்தியோகத்தில் உயர்வும் செல்வாக்கும் அதிகரிக்கும், பிள்ளைகளின் வழியில் நன்மைகள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். திட்டமிட்டு செயல்படும் செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரோகிணி: முயற்சிகளின் வழியே நன்மைகள் தோன்றும், வாரத்தின் கடைசியில் செயல்களில் சங்கடம் ஏற்பட்டு சிரமத்தை அடைவீர்கள் என்றாலும் நினைத்தவற்றை அடையும் முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்துவீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 18.5.2022 காலை 11.01 மணி - 19.5.2022 நாள் முழுவதும்


மிதுனம்


சூரியன், ராகு, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். திருமாலை மனதில் எண்ணி செயல்பட வளங்கள் கூடும்.

மிருகசீரிடம் 3, 4: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி குறித்து தீர்மானிப்பீர்கள். தடைபட்டிருந்த வரவுகள் வரப்பெற்று நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

திருவாதிரை: முயற்சிகளின் வழியே முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளினால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் போட்டிகள் உண்டானாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கடும் முயற்சிகளால் எதிர்ரபார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3: குடும்ப உறவுகளிடையே பிணக்குகள் நீடிக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். அந்நியர்களின் உதவிகளால் சங்கடங்களை சமாளிப்பீர்கள்.


கடகம்


சுக்கிரன், குரு நன்மைகள் வழங்குவதால் யோகமடைவீர்கள். சனீஸ்வரனுக்கு ப்ரீத்தி செய்ய பிரச்சனைகள் விலகும்.

புனர்பூசம் 4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும், சரியான திட்டங்கள் தீட்டி அதன் வழியே செல்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு உண்டாகும். தொழில் விவகாரங்களில் புதிய நபர்களின் ஆலோசனைகள் வேண்டாம்.

பூசம்: வாரத்தின் பிற்பகுதியில் அரசு வழியில் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும், உடல்நிலையில் சிறிய சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவால் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். தாய்வழி உறவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். உங்கள் புத்தி சாதுரியத்தால் பிரச்சனைகளை இல்லாமல் செய்வீர்கள். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.


சிம்மம்


சனி, சுக்கிரன், கேது நற்பலன்களை வழங்குவார்கள். விநாயகரை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.


latest tamil newsமகம்: ஞாயிறு முதல் உங்கள் ராசிநாதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தைரியத்துடன் செயல்படக்கூடிய அளவிற்கு மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரித்து நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

பூரம்: புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் அனுகூலம் காண்பீர்கள்.

உத்திரம் 1: எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும். அவசரப்பட்டு எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் சீராகி ஆரோக்கியத்துடன் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.


கன்னி


செவ்வாய், குரு, சுக்கிரன், யோகமான பலன்களை வழங்குவார்கள். மகாலட்சுமியை மனதில் நினைத்து செயல்பட நன்மை உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4: வாக்கில் நிதானம் வேண்டும். உங்கள் பேச்சுகளால் தேவையற்ற சங்கடங்கள் உருவாக வாய்ப்புண்டு. எதிர்பார்த்த செயல்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

அஸ்தம்: தொழிலில் வருவாய் அதிகரிக்கும். கடன்களால் உண்டான நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

சித்திரை 1, 2: குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். நட்புகள் வழியே நன்மைகள் நடந்தேறும். அந்நியர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும். திருமண வயதினருக்கு வரன்கள் தேடி வரும். பொருள் வரவு அதிகரிக்கும்.


துலாம்


சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்கள். வராகியை வழிபட்டுவர பிரச்சனைகள் விலகும்.

சித்திரை 3, 4: மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக மாறும். குடும்பத்தின் தேவைகள் அதிகரித்து பணம் பல வழிகளிலும் செலவாகி நெருக்கடியை உண்டாக்கும். நட்புகளால் சங்கடங்கள் தோன்றும்.

சுவாதி: அலைச்சல் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தலைதூக்கும். செலவுகளால் மனம் சங்கடத்தில் மூழ்கும்.

விசாகம் 1, 2, 3: தீய நட்புகளால் மனம் குறுக்கு வழியில் செல்லும்.அரசு வழியில் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். குடும்பத்திற்குள் குழப்பம் மேலோங்கும். புதன், வியாழக்கிழமைகளில் வரவுகள் உண்டாகி நிலைமையை சரிசெய்வீர்கள்.


விருச்சிகம்


சனி, குரு, சுக்கிரன், ராகு யோகத்தை வழங்குவார்கள். தில்லை காளியை வேண்டி வழிபட்டுவர எதிர்ப்புகள் விலகும்.

விசாகம் 4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் உங்கள் கைக்கு வரும். இதுவரையில் உண்டாகி இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் குறுக்கிட்ட எதிரிகள் விலகுவார்கள்.

அனுஷம்: குடும்பத்திற்குள் இருந்த குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரித்து சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகி மகிழ்வீர்கள்.

கேட்டை: தொழிலில் புதிய அனுகுமுறைகளைக் கையாண்டு முன்னேற்றம் காண்பீர்கள். தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். சிறு குழப்பம் ஏற்பட்டு விலகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகளில் தீர்வு உண்டாகும்.


தனுசு


செவ்வாய், சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவார்கள். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்பட வெற்றிகள் உண்டாகும்.

மூலம்: குடும்பத்தில் நெருக்கடிகள் நீடித்தாலும் உங்கள் செலவிற்கேற்ப வருவாய் வரும். அலைச்சல் அதிகரித்தும் முயற்சிக்கேற்ற ஆதாயம் இல்லாமல் போனாலும் எதையும் துணிச்சலாக செய்து நினைத்த இடத்தை அடைய முயல்வீர்கள்.

பூராடம்: முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தாய்வழி உறவுகளின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.

உத்திராடம் 1: உங்கள் முன்பாக இருந்த தடைகள் அகலும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். பிள்ளைகளின் நலனுக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.


மகரம்


சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவார்கள். குலதெய்வத்தை வழிபடுவதின் வழியே நெருக்கடிகள் நீங்கும்.

உத்திராடம் 2, 3, 4: பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றும் அளவிற்கு வரவுகள் உண்டாகும். சந்தோஷமான விஷயங்களில் மனம் செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

திருவோணம்: நெருக்கடிகளை எல்லாம் உங்கள் முயற்சிகளால் சரி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியே மன உளைச்சல் அதிகரிக்கும். நட்புகளுடன் இருந்த நெருக்கம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.

அவிட்டம் 1, 2: தாய்வழி உறவுகள் வழியே சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் அவற்றை எல்லாம் சரிசெய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட்டு மகிழ்வீர்கள்.


கும்பம்


குரு, சுக்கிரன், ராகு முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். சனீஸ்வரருக்கு ப்ரீத்திகள் செய்வதால் நன்மைகள் உண்டாகும்.

அவிட்டம்: வெள்ளிக்கிழமை வரை செயல்களில் இழுபறி இருக்கும் அதன்பின் உங்கள் முயற்சிகள் நடந்தேறும். அவசரப்பட்டு செயல்படும் காரியங்கள் சங்கடத்தை உண்டாக்கும். தந்தை வழியில் நெருக்கடிகள் நீடிக்கும் என்றாலும் அவற்றையெல்லாம் சரிசெய்வீர்கள்.

சதயம்: வாரத்தின் பிற்பகுதியில் எதிர்ப்புகளால் சங்கடப்படுவீர்கள். செலவுகள் பல வழியிலும் உண்டாகி சிரமத்தை உண்டாக்கினாலும் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் நிலைமைகளை சரி செய்வீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவுகளில் தடைகள் இருக்கும் என்றாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 13.5.2022 காலை 6:00 மணி - 14.5.2022 அதிகாலை 4:29 மணி


மீனம்


சுக்கிரன், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். நவகிரக வழிபாடு நெருக்கடிகளை நீக்கும்.

பூரட்டாதி 4: புதிய முயற்சிகள் வெற்றியாகும். வேலை நிமித்தமாக ஊர்விட்டு ஊர்செல்வீர்கள். திருமண முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினருடன் சங்கடங்கள் தோன்றி மறையும்.

உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளால் குழம்பித்தவிப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சில சங்கடங்களை அடைவீர்கள்.

ரேவதி: வேலை நிமித்தமாக அலைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை இல்லையெனில் அதன்வழியே நண்பர்கள் எதிரிகளாவார்கள். குடும்பத்திற்குள் குழப்பங்கள் உண்டாகலாம் என்பதால் நிதானம் அவசியம்.

சந்திராஷ்டமம்: 14.5.2022 அதிகாலை 4:29 மணி - 16.5.2022 காலை 8:21 மணி

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X