ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்தவர் தற்கொலை

Added : மே 13, 2022 | |
Advertisement
நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே, ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர், தற்கொலை செய்து கொண்டார்.தர்மபுரி, நல்லம்பள்ளி அடுத்த மாரிகொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேஷ், 20; பிளஸ் 2 முடித்து விட்டு, மூன்றாண்டுகளாக 'நீட்' தேர்வுக்கு படித்து வந்தார். சில நாட்களாக ஆன்லைன் விளையாட்டில் பணம் கட்டி விளையாட தொடங்கினார். கையில் வைத்திருந்த பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து விளையாட

நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே, ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர், தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி, நல்லம்பள்ளி அடுத்த மாரிகொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேஷ், 20; பிளஸ் 2 முடித்து விட்டு, மூன்றாண்டுகளாக 'நீட்' தேர்வுக்கு படித்து வந்தார். சில நாட்களாக ஆன்லைன் விளையாட்டில் பணம் கட்டி விளையாட தொடங்கினார். கையில் வைத்திருந்த பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து விளையாட பணமின்றி, வீட்டிலிருந்த நகையை அடகு வைத்து விளையாடி உள்ளார். அதில், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இழந்தார். விரக்தியடைந்த அவர் கடந்த, 7ம் தேதி பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X