ரோஸ்வுட் மரங்கள்
கடத்திய இருவர் கைது
கிருஷ்ணகிரி, மே 13-
தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை - தோட்டிகுப்பம் சாலையில் ரோஸ்வுட் மரம் கடத்துவதாக, மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் விஜயமுருகன், வனக்காப்பாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம் வனக்காவலர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக ரோஸ்வுட் மரங்களை கடத்தி வந்த பிக்கப் வேனை வனத்துறையினர் மடக்கினர். வேனிலிருந்த பென்னாங்கூர் பகுதி முகமது ரபிக், 43, மசூத், 40 ஆகியோர் வனத்துறையிடம் சிக்கினர். வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், 32, தேன்கனிக்கோட்டை சுஹேல், 42 ஆகியோர் தப்பினர். பிடிபட்டவர்
களிடமிருந்து, 3.5 டன் எடையுள்ள ரோஸ்வுட் மரங்கள் மற்றும்
பிக்கப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மரங்களை வெட்டி சாய்த்த
30 பேர் மீது வழக்கு
நல்லம்பள்ளி, மே 13-
நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிப்பட்டியில், ஒருவரது
பூர்வீக நிலம் உள்ளது. இதிலிருந்த ஏராளமான மா மரங்களை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர் வெட்டி, பொக்லைன் மூலம் வேறோடு அகற்றினர். இவர்கள் மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வெண்டுமென, சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்த தேவகி, 55, என்பவர், தர்மபுரி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, நீதிமன்றம் தொப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்த பெருமாள், 50, மகாலிங்கம், 55, சென்னகேசவன், 43, சண்முகம், 45, முருகேசன், 45, உள்பட, 20 ஆண், 10 பெண்கள் என, 30 பேர் மீது எட்டு பிரிவுகளில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நிலத்தகராறில் கத்திக்குத்து
இருவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, மே 13-
கிருஷ்ணகிரியில், நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு
தரப்பினரிடையே கத்திக்குத்து நடந்தது. இது தொடர்பான புகாரின்படி, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை, குப்பம் சாலை பகுதியை
சேர்ந்தவர் தங்கராஜ், 36. கட்டட தொழிலாளி; அதே பகுதியை
சேர்ந்தவர் ராஜேந்திரன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் அவர்களது நிலங்களை பிரிப்பது தொடர்பாக கடந்த, 9ல் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில்
ஈடுபட்டனர். அப்போது ராஜேந்திரன் தரப்பினர் தங்கராஜின்
வலது கையில் கத்தியால் குத்தி காயப்படுத்தினர். தங்கராஜ்
அளித்த புகார்படி ராஜேந்திரன், சிவகாமியம்மாள் ஆகிய இருவர்
மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE