அக்கம் பக்கம் நாமக்கல்

Added : மே 13, 2022
Advertisement
'கேட்' திறக்க தாமதம்மாணவர்கள் அவதிபள்ளிபாளையம், மே 13- பள்ளிபாளையம் அருகே வெப்படையில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் தினமும், காலை, 8:00 மணி முதலே, பள்ளிக்கு வரத்துவங்கி விடுவர். எப்போதும், 8 மணிக்கு முன்னரே பள்ளியின் கேட் திறக்கப்படும். ஆனால், நேற்று கேட் திறக்க காலதாமதம்

'கேட்' திறக்க தாமதம்
மாணவர்கள் அவதி
பள்ளிபாளையம், மே 13-
பள்ளிபாளையம் அருகே வெப்படையில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் தினமும், காலை, 8:00 மணி முதலே, பள்ளிக்கு வரத்துவங்கி விடுவர். எப்போதும், 8 மணிக்கு முன்னரே பள்ளியின் கேட் திறக்கப்படும். ஆனால், நேற்று கேட் திறக்க காலதாமதம் ஆனதால், காலை, 8:45 மணி வரை,
மாணவர்கள் பள்ளி வாசலில் காத்திருந்து அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: நேற்று, 8:45 மணிக்கு தான் பள்ளியின் கேட் திறக்கப்பட்டது. இதனால் அதிகளவு மாணவர்கள் வந்து விட்டதால், கூட்டம் அதிகரித்து விட்டது. தினமும், 8:00 மணிக்கு பள்ளி கேட்டை திறக்கவும், பள்ளியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், கல்வித்துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்கள் வாக்குவாதம்
கல்வி அதிகாரி விசாரணை
பள்ளிபாளையம், மே 13-
பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணிபுரியும், இரண்டு ஆசிரியர்கள் நேரம் தவறி வகுப்புக்கு செல்வது, மாணவர்களிடம் அலட்சியமாக நடந்து கொள்ளுவது, மற்ற ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்து போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக புகார் வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சக ஆசிரியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்துள்ளனர். இதை மாணவர்கள், பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி மேலாண்மை
குழுவினர், கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வட்டார கல்வி அதிகாரி உதயகுமார், நேற்று
பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார்.
வி.ஏ.ஓ.,க்களுக்கு
நிலஅளவை பயிற்சி
சேந்தமங்கலம், மே 13-
வி.ஏ.ஓ.,க்களுக்கு நிலஅளவை பயிற்சி சேந்தமங்கலத்தில் நடந்தது.
சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு பட்டா மாறுதல் பணி தொடர்பான, புத்தாக்க நில அளவை பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பினை தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பயிற்சி வகுப்பில் வட்ட துணை
ஆய்வாளர் கனகராஜ், வட்ட சார் ஆய்வாளர் இந்துமதி, சார்
ஆய்வாளர் முருகேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் புலத்தில் உட்பிரிவு பயிற்சி, உட்பிரிவு கோப்பு தயாரித்தல், பரப்பு கணித்தல் பயிற்சி, இணைய
தளத்தில் பட்டா மாறுதல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி வகுப்பு,
7 நாட்களுக்கு நடக்கிறது. இதில், சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள,
45 வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X