அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
8 திருநங்கைகள் மீது வழக்கு
கரூர், மே 13---
கரூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, அரசு டவுன் பஸ்சில் திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது, பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, டிரைவர், கண்டக்டர் ஆகியோர் திருநங்கைகளை பஸ்சை விட்டு இறங்கும்படி கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள், அங்கு நின்றிருந்த இரண்டு அரசு பஸ்களின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். பதற்றமான சூழ்நிலையால், பயணிகள் அலறியடித்து, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே ஓடினர். அப்போது, அங்கு வந்த போலீசார் திருநங்கைகளை
சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் காரணமாக,
3 மணி நேரத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார், 8 திருநங்கைகள்
மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மாரியம்மன் கோவில் திருவிழா
மே 25ல் உள்ளூர் விடுமுறை
கரூர், மே 13---
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், கம்பம்
ஆற்றுக்கு அனுப்பும் நாளான, மே, 25ல் உள்ளூர் விடுமுறை
அளிக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா மே, 8ல் தொடங்கியது. ஜூன், 5 வரை திருவிழா நடக்கிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி, மே, 25ல் நடக்கிறது. கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நாளான, 25ம் தேதி மட்டும் மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்
படுகிறது. இந்த நாளில், அரசு அலுவலகங்களில் முக்கிய பணிகள் மட்டும் செயல்படும். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக
ஜூன், 4-ல் அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கேட்டு கொடுமை
ஆசிரியர்கள் மீது வழக்கு
கரூர், மே 13---
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அரசுப்பள்ளி
ஆசிரியர்கள் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகா,
28. இவருக்கும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நவீன்ராஜூக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், மனைவியிடம், 10 லட்சம் ரூபாய் வரதட்சணை
கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, கரூர்
மகிளா நீதிமன்றத்தில், கார்த்திகா வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற
உத்தரவுப்படி, கரூர் மகளிர் போலீசார், கணவர் நவீன், மாமியார் பிரேமா, மாமனார் ராஜா ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில்,
புகாரளித்த பெண்ணின் மாமனார், மாமியார் ஆகியோர் அரசு
பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE