செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : மே 13, 2022 | |
Advertisement
மரம் விழுந்து வீடு சேதம்காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பந்தாரஹள்ளி பஞ்., கல்லுக்கடை பஸ் ஸ்டாப்பின் அருகே இருந்த மிகவும் பழமையான அரசமரம் மழைக்கு முறிந்து குப்புசாமி, 55, என்பவர் வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் மீது போடப்பட்ட, சீட் மற்றும் கம்பிகள் உடைந்து சேதமானது. இந்த மரத்தின் கீழ் அப்பகுதி மக்கள் பஸ்சுக்கு காத்திருப்பர் என்பதால், உடைந்து பாதியிலுள்ள

மரம் விழுந்து வீடு சேதம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பந்தாரஹள்ளி பஞ்., கல்லுக்கடை பஸ் ஸ்டாப்பின் அருகே இருந்த மிகவும் பழமையான அரசமரம் மழைக்கு முறிந்து குப்புசாமி, 55, என்பவர் வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் மீது போடப்பட்ட, சீட் மற்றும் கம்பிகள் உடைந்து சேதமானது. இந்த மரத்தின் கீழ் அப்பகுதி மக்கள் பஸ்சுக்கு காத்திருப்பர் என்பதால், உடைந்து பாதியிலுள்ள அரசமரத்தை பொதுமக்கள் நலன் கருதி அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண் சடலம் மீட்பு
கிருஷ்ணகிரி: ஓசூர், மூக்கண்டபள்ளி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அருகில், நேற்று முன்தினம் காலை அடையாளம் தெரியாத, 40 முதல், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., திருமால், 30 புகார்படி, ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, மடத்தானுாரை சேர்ந்தவர் கெவரன், 45. இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் செம்மண் கடத்தியுள்ளனர். அந்த வழியாக சென்ற புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி அலுவலர் பொன்னுமணி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, செம்மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, போச்சம்பள்ளி போலீசில் டிப்பர் லாரியை ஒப்படைத்தார். அவர் புகார்படி வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள டிரைவர் வெங்கடேசன், ஓனர் கெவரன் இருவரையும் தேடி வருகின்றனர்.
விபத்தில் கூலித்தொழிலாளி பலி
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தேக்கல்நாய்க்கனஹள்ளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ் பெருமாள், 23. இவர் கடத்துாரிலுள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்ல, யமாகா பைக்கில் வீட்டிலிருந்து கடத்துார் நோக்கி சென்ற போது, தின்டலானுாரில் காலை, 10:00 மணிக்கு, எதிரே வந்த லாரி மோதியது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இரு‍வேறு இடத்தில் 2 சிறுமியர் மாயம்
கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்த, 18 வயது சிறுமி, கடந்த, 10ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். ஓசூர் சிப்காட் போலீசில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிப்காட் பேகேப்பள்ளியை சேர்ந்த சதீஷ், 24, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல, ஓசூரை சேர்ந்த, 17, வயது சிறுமி பாகலுாரிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பாகலுார் போலீசில் சிறுமியின் பெற்றோர் அளித்தபுகாரில், பாகலுார் ஏ.கே.காலனி கொட்டாயை சேர்ந்த மாது, 26 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்
ஆர்.டி.ஓ., ஆபீசில் பா.ஜ.,வினர் மனு
அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாய்க்கன்பட்டி, சங்கிலிவாடி, கம்பாலை, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், பா.ஜ., கட்சிக்கொடியை ஏற்றவும், அங்குள்ள ரேஷன்கடை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பிரதமர் மோடி படம் வைக்க அனுமதி கோரியும், அரூர் ஆர்.டி.ஓ.,
அலுவலகத்தில் பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.
பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஊர்வலமாக ஆடி வந்தனர். மாவிளக்கு மற்றும் பூங்கரகம் எடுத்தனர். அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கல்லுாரியில் புத்தக கண்காட்சி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், வானவில் புத்தக களஞ்சியம் சார்பில், புத்தக கண்காட்சி நேற்று நடந்தது. இதை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துவக்கி வைத்தார். கண்காட்சியில், வானவில் புத்தக களஞ்சியம் சார்பில் பல்வேறு புத்தகங்கள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை
அரூர்: அரூர் அடுத்த கெளாப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் அருகில், மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளன. இதேபோல், எல்லப்புடையாம்பட்டி சுடுகாடு உள்ளிட்ட இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அசம்பாவிதம் நடக்கும் முன், மின்கம்பி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலிபர் விபரீதம்
அரூர்: அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்தவர் கிஷோர், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை ராஜேந்திரன், 47, புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரூர் டவுன் பஞ்.,ல் கலெக்டர் ஆய்வு
அரூர்: அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில், நேற்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். வணிகர்கள் தங்கள் கடைகளில் சேரும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால், செயல் அலுவலர் கலைராணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X