கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படம் முன், செவிலியர்கள் பணி, தியாகத்தை நினைவு கூர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லுாரி முதல்வர் அசோகன், கேக் வெட்டி செவிலிய கண்காணிப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கி பேசுகையில், ''கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமென நினைத்து, பல உயிர்களை காப்பாற்ற பாடுபட்டவர்கள் செவிலியர்கள். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
பின்னர், செவிலியர்களின் பணியை பாராட்டி கவிதைகள் வாசிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், செவிலிய கண்காணிப்பாளர் நிலை 1, நிலை 2ல் பணியாற்றும் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவர் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜலட்சுமி, தினேஷ், மது, மற்றும் நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை செவிலியர் பத்மினி தலைமையில் செவிலியர்கள் செல்வி, கீதா, முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
* தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செவிலியர் விடுதியில், செவிலியர் மனமகிழ் மன்றம் சார்பில், உலக செவிலியர் தின விழா நடந்தது. செவிலியர் கண்காணிப்பாளர் கலைதேவி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் அமுதவல்லி முன்னிலை வகித்தார். முன்னதாக, மருத்துவமனை நுழைவு வாயிலிருந்து செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக விடுதி வரை சென்றனர். பின், அங்கிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படம் முன், செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர்.
* செவிலியர் தினத்தையொட்டி, நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வவிநாயகம் தலைமை வகித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE