கிருஷ்ணகிரியில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும், 15 முதல் ஜூன், 15 வரை கிருஷ்ணகிரி டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில், 10 முதல், 18 வயது வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோச்சிங்கில் லெவல் 1, தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் இந்த முகாமை நடத்துகின்றனர். எனவே, கிருஷ்ணகிரி மண்டலத்தில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை, மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33, கே.தியேட்டர் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, இணை செயலாளர் சிவசங்கர், 96770 00063 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஓசூர் மண்டலத்தில், ஹீரோ ஷோரூம், கிருஷ்ணகிரி சாலை, ஓசூர் என்ற முகவரியில் நேரில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, உப தலைவர் சுனில், 98427 40963 மற்றும் இணை செயலாளர் ராஜப்பா, 99648 69001 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE