தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும், கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி நேர துாய்மையாளர் பணிக்கு நேர்காணல் மூலம் இனசுழற்சி அடிப்படையில், தொகுப்பூதியத்தின்படி ஆண்-3, பெண்-1, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 18 முதல், 37 வயது வரை இருக்க வேண்டும். மற்ற பிரிவினர், 18 முதல், 34 வயது வரை இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் மே, 30க்குள் உரிய சான்றிதழ்களுடன், தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04342 231861 என்ற எண்ணிலும், https://dharmapuri.nic.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE