மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட, 70 ஆயிரத்து, 361 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்துக்கு தேர்தலுக்கு முன் பிரசார பயணமாக வந்த ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தில் மக்களிடம் மனுக்களை பெற்றார். இம்மனுக்கள் மீது, தான் முதல்வரான, 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து இத்திட்டம், 'முதல்வரின் முகவரி' என பெயர் மாற்றப்பட்டு, இன்றும் மனுக்கள் பெறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 77 ஆயிரத்து, 343 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுபற்றி அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட அளவில் பெறப்பட்ட, 77 ஆயிரத்து, 343 மனுக்களில், 70 ஆயிரத்து, 361 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2,142 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 150 பேருக்கு, 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடனுதவி வழங்கி உள்ளோம். 90 பேருக்கு சுய தொழில் துவங்க, 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கி உள்ளோம். மொத்தம், 240 பேருக்கு, 5.28 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE