இதமான சூழலால் மகிழ்ச்சி
ஈரோடு: ஈரோட்டில் நேற்று பகல் நேர வெப்ப நிலை, 32 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் இதமான சூழல் நிலவியது மக்களை மகிழ செய்தது. அதேசமயம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பவானிசாகரில், 1 மி.மீ., மழை பெய்தது. வேறெங்கும் மழை பெய்யவில்லை.
விசைத்தறி பயிற்சி
18ல் துவக்கம்
ஈரோடு, மே 13-
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், ஈரோட்டில் இயங்கும் விசைத்தறி சேவை மையத்தில் வரும், 18 முதல் விசைத்தறி பயிற்சி வகுப்பு துவங்குகிறது. '2/118-ஏ, ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, ஈரோடு' என்ற முகவரியில் உள்ள மையத்தில், சாதா விசைத்தறி, டாபி மற்றும் டெர்ரி தறிகளில் பயிற்சி அளிக்கப்படும். வரும், 18 முதல் துவங்கும் ஒரு மாத கால சேர்க்கை இன்று முதல் நடக்கிறது. ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
௬ டூவீலர்கள் திருட்டு
தனிப்படை அமைப்பு
பெருந்துறை, மே 13-
பெருந்துறை பகுதியில், பல்வேறு கால கட்டங்களில், ஆறு டூவீலர்கள் திருட்டு போனதாக வந்த புகாரின்படி, போலீசார்
விசாரிக்கின்றனர்.
பெருந்துறை, விஜயமங்கலம், வாய்ப்பாடி சாலையை சேர்ந்தவர் வக்கீல் செந்தில்குமார். வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்; விஜயமங்கலம், கோவை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரிவின் ரித்தியா; விஜயமங்கலம், பாவடி வீதியை சேர்ந்தவர் மூர்த்தி; பெருந்துறை விஷ்ணு நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; பெருந்துறை, பவானி ரோட்டை சேர்ந்தவர்
விஜயகுமார்.
இவர்களின் டூவீலர்கள் திருட்டு போனது. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து, களவாணிகளை தேடி
வருகின்றனர்.
நாளை பொது வினியோக
திட்ட குறைதீர் கூட்டம்
ஈரோடு: மாவட்டத்தில் நாளை, ௧௦ இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. காலை, 10:00 மணிக்கு அனைத்து தாலுகாவிலும் நடக்கிறது. புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம். தாலுகா வாரியாக, ஈரோடு - கருங்கல்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - திருவேங்கடம்பாளையம் புதுார் கடை, மொடக்குறிச்சி - கரும்பாறை - முள்ளாம்பரப்பு கடை, கொடுமுடி - வேலாயுதம்பாளையம் கடை, கோபி - பாஸ்கரா 2 கடை, நம்பியூர் - குருமந்துார் கடை, பவானி - மைலம்பாடி கடை, அந்தியூர் - பட்லுார் நான்கு ரோடு கடை, தாளவாடி - கரளவாடி கடையில் கூட்டம்
நடக்கிறது.
மகளிர் தங்கும் விடுதியை
பதிவு செய்ய அழைப்பு
ஈரோடு: மாவட்டத்தில் உள்ள, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவனம் நடத்தும் மகளிர் விடுதி, அனைத்து பெண்கள் தங்கி பயிலும் மகளிர் கல்லுாரி விடுதிகள், அரசிடம் உரிமம் பெற்று இயங்க வேண்டும். பதிவு செய்ய, பதிவை புதுப்பிக்க, வரும், 30க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகுமாறு, வேண்டுகோள் விடுக்கப்
பட்டுள்ளது.
இதேபோல் முதியோர் இல்ல உரிமையாளர்களும், 30ம் தேதிக்குள் தங்களது இல்லத்தை, சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்திருந்தால், புதுப்பித்து கொள்ள வேண்டும்.
நள்ளிரவில் முறிந்த மரம்
ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.,ரோடு, மாரப்ப முதலாவது வீதியில் இருந்த வேப்பமரம், நேற்று முன்தினம் நள்ளிரவில், பலத்த காற்றால் முறிந்து விழுந்தது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி மரத்தை முழுமையாக வெட்டி அகற்றிய பிறகு, போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் மின் தடை
ஏற்பட்டது.மைக்கேல்பாளையத்தில்
வேளாண் சிறப்பு முகாம்
அந்தியூர், மே 13-
அந்தியூர் யூனியன் மைக்கேல்பாளையம் பஞ்., அலுவலகத்தில், வேளாண் சிறப்பு முகாம் நடந்தது. பஞ்., தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கால்நடைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண்-விற்பனை துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாய கடன் அட்டை, சொட்டுநீர் பாசனம், பட்டா மாறுதல் உட்பட விவசாயிகளின் திட்டங்களை பற்றி விளக்கினர். இது சம்பந்தமாக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE