கரிய காளியம்மன் கோவில் குண்டம் விழா

Added : மே 13, 2022
Advertisement
சத்தியமங்கலம் அருகேயுள்ள தாண்டாம்பாளையம், கரிய காளிம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து மே, 4ல் கருமாரியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. ௧0ல் படைக்கலம் எடுத்து வந்தனர். 11ல் அரண்மனை பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 5:30 மணிக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, 6:30


சத்தியமங்கலம் அருகேயுள்ள தாண்டாம்பாளையம், கரிய காளிம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து மே, 4ல் கருமாரியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. ௧0ல் படைக்கலம் எடுத்து வந்தனர். 11ல் அரண்மனை பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 5:30 மணிக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, 6:30 மணிக்கு தலைமை பூசாரி சண்முகம் முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாவிளக்கு பூஜை நடந்தது. இரவு, 8:௦௦ மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. இன்று முத்து ரதத்தில் அம்மன் ஊர்வலம் வருகிறது. நாளை மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. விழாவில் தாண்டாம்பாளையம், கெஞ்சனுார், மூலக்கடை, உப்புபள்ளம், கொழிஞ்சானுார் பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர்
தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X