குளித்தலையில் இலவச கண் சிகிச்சை முகாம்

Added : மே 13, 2022 | |
Advertisement
குளித்தலையில், கரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கரூர் தனியார் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா துவக்கி வைத்தார். முன்னாள் மருத்துவ அதிகாரி பொன்மருதமுத்து, நகராட்சி மேற்பார்வையாளர் நாகராஜன், பில் கிளர்க் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கண் மருத்துவர் ஸ்ரீலட்சுமி


குளித்தலையில், கரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கரூர் தனியார் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா துவக்கி வைத்தார். முன்னாள் மருத்துவ அதிகாரி பொன்மருதமுத்து, நகராட்சி மேற்பார்வையாளர் நாகராஜன், பில் கிளர்க் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கண் மருத்துவர் ஸ்ரீலட்சுமி பொதுமக்களுக்கு, கண் பரிசோதனை செய்தார்.
முன்னாள் மருத்துவ அதிகாரி பொன்.மருதமுத்து பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை வழங்கினார். நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். நகராட்சி மேற்பார்வையாளர் ராஜசேகர், சேதுராஜன், தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X