சிறுபான்மை ஆணையம்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி| Dinamalar

சிறுபான்மை ஆணையம்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Added : மே 13, 2022 | |
தமிழக அரசின் சிறுபான்மை ஆணையம், நாமக்கல் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியர்கான பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில சிறுபான்மை ஆணைய, மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் போட்டியை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நடுவர்களாக பேராசிரியர் அரசு.பரமேசுவரன், ஆசிரியை சசிகலா ஆகியோர் இருந்தனர். இதில், மாவட்டத்தில் உள்ள, 26


தமிழக அரசின் சிறுபான்மை ஆணையம், நாமக்கல் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியர்கான பேச்சுப்போட்டி நாமக்கல்லில் நேற்று நடந்தது.
மாநில சிறுபான்மை ஆணைய, மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் போட்டியை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நடுவர்களாக பேராசிரியர் அரசு.பரமேசுவரன், ஆசிரியை சசிகலா ஆகியோர் இருந்தனர். இதில், மாவட்டத்தில் உள்ள, 26 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இருந்து, 70 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 15 தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேசலாம் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும், 5 நிமிடம் வழங்கப்பட்ட நிலையில், அனைவரும் ஆர்வமுடன் பேசினர். தமிழ் வழிப்போட்டியில், எக்ஸல் கல்வியியல் கல்லுாரி மாணவர் தமிழரசன் முதல் பரிசும், விவேகானந்தா கலை, அறிவியல் மகளிர் கல்லுாரி மாணவி நவமதி இரண்டாம் பரிசும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி மாணவி பத்மா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இதேபோல், ஆங்கில வழிப்போட்டியில் டிரினிடி மகளிர் கல்லுாரி மாணவி மோனிகாஸ்ரீ முதல் பரிசும், மகேந்திரா கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் பரத் இரண்டாம் பரிசும், செல்வம் கல்லுாரி மாணவி ஸ்ரீஅபர்ணா மூன்றாம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகை முறையே, 20 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய் வீதம், சிறுபான்மை ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இவர்கள் ஜூன், 3 ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X