தினசரி மார்க்கெட் இடம் நகராட்சி சேர்மன் ஆய்வு

Added : மே 13, 2022 | |
Advertisement
தற்காலிக தினசரி மார்க்கெட் அமைப்பதற்கான இடத்தை ராசிபுரம் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார். ராசிபுரம் கடைவீதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் புதியதாக கடைகள் கட்ட, அண்மையில் அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். கட்டடம் கட்டுவதால், அங்குள்ள கடைகளை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால், வியாபாரிகள் மாற்று இடம் தருமாறு, நகராட்சி சேர்மன் கவிதாவிடம் கோரிக்கை

தற்காலிக தினசரி மார்க்கெட் அமைப்பதற்கான இடத்தை ராசிபுரம் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
ராசிபுரம் கடைவீதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் புதியதாக கடைகள் கட்ட, அண்மையில் அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். கட்டடம் கட்டுவதால், அங்குள்ள கடைகளை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால், வியாபாரிகள் மாற்று இடம் தருமாறு, நகராட்சி சேர்மன் கவிதாவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சேர்மன் கவிதா, பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள நகராட்சி இடத்தில், தற்காலிகமாக தினசரி மார்க்கெட் இயங்க, போதிய வசதிகளை செய்து தருவதாக கூறினார்.
நேற்று அந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து, தேவையான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், நகராட்சி பொறியாளர் கிருபாகரன், கவுன்சிலர் விநாயகமூர்த்தி, அவைத்தலைவர் அமிர்தலிங்கம், நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள்
உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X