பள்ளிபாளையம் அருகே படவீடு, சவுதாபுரம் பகுதியில் நீர்நிலைகளில் குழாய் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, வெப்படையைச் சேர்ந்த பா.ஜ., மாவட்ட விவசாயி அணி பொதுச்செயலாளர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம், ஆனங்கூர் ரயில்வே பாதை வரை நடைபெறுகிறது. இப்பணி முழுமையடைய இன்னும் சில மாதமாகும். மேட்டூர் அணையில், 106 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளதால், அதுவரை இந்த குடிநீர் குழாய் மூலம் படவீடு டவுன் பஞ்., மற்றும் சவுதாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப முடியும். இவ்வாறு நிரப்பினால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாய இலவச மின்சார செலவு பெருமளவில் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE