கலெக்டரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

Added : மே 13, 2022
Advertisement
முட்டல், பூமரத்துப்பட்டி மலைக்கிராமத்தில் கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள், அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.சேலம் மாவட்டம், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. முன்னதாக, கலெக்டர் கார்மேகம், ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள், பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமங்களை ஆய்வு செய்தனர்.



முட்டல், பூமரத்துப்பட்டி மலைக்கிராமத்தில் கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள், அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. முன்னதாக, கலெக்டர் கார்மேகம், ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள், பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பஸ், மின்
விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, அங்குள்ள பாதையில் அமர்ந்து மக்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., சரண்யா, போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து கலெக்டரை சூழ்ந்த மக்கள், 'குண்டும், குழியுமான சாலை மட்டுமின்றி பஸ் வசதியும் இல்லை. வனப்பகுதியில் காட்டெருமையால் செல்ல முடியவில்லை. பஸ் இல்லாததால், இங்குள்ள இளைஞர்களுக்கு, பெண் கூட யாரும் தராததால் திருமணம் செய்ய முடியாமல் வயது கடந்த நிலையில் பலர்
உள்ளனர். பள்ளிக்கட்டடமும் சேதமடைந்துள்ளது' என்றனர்.
கலெக்டர், 'சாலை சீரமைத்து பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருந்தகம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து, மக்கள் கலைந்து
சென்றனர்.
ஏணியில் ஏறினார்
முட்டல் அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, பழைய வகுப்பறை கட்டடத்தை உடனே இடிக்க வேண்டும்; மற்றொரு வகுப்பறை தரைத்தளத்தில், 'டைல்ஸ்' கற்கள் பதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மேல்தளத்துக்கு, 'ஏணி' மூலம் சென்ற அவர், மழைநீர் கசிவு ஏற்படாமல் சீரமைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார். பள்ளி, அங்கன்வாடி மையத்தில் கழிப்பறையை சீரமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை தயாராக வைத்திருக்க மருத்துவர்களிடம்
அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X