சேலத்தை குளிர்வித்த மழை

Added : மே 13, 2022
Advertisement
சேலத்தில் இரு மாதங்களாக, கோடை வெயிலால், வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியிருந்தது. இதனால், மதியம் வெளியே செல்ல முடியாதபடி வெப்பம் இருந்தது. சில நாளுக்கு முன் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், அனைத்து தரப்பினர் இடையே வெயில் குறித்த அச்சம் நிலவியது. ஆனால், வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், சேலத்தில் இரு நாளாக வெயில் தாக்கம் குறைந்திருந்தது. நேற்று மாலை, சாரலாக தொடங்கிய மழை,


சேலத்தில் இரு மாதங்களாக, கோடை வெயிலால், வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியிருந்தது. இதனால், மதியம் வெளியே செல்ல முடியாதபடி வெப்பம் இருந்தது. சில நாளுக்கு முன் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், அனைத்து தரப்பினர் இடையே வெயில் குறித்த அச்சம் நிலவியது. ஆனால், வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், சேலத்தில் இரு நாளாக வெயில் தாக்கம் குறைந்திருந்தது. நேற்று மாலை, சாரலாக தொடங்கிய மழை, தொடர்ந்து அடைமழையாக, இரவு வரை பெய்தது. இதனால், சேலம் மாநகரில் 'குளுகுளு' சூழல் உருவானது.
அதேநேரம், மாநகரின் சில தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் தேங்கி, மக்கள் சிரமப்பட்டனர். மேலும், பனமரத்துப்பட்டி வட்டாரத்திலும் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் கிராமத்தில், அரளி செடியிலிருந்து மொக்கு பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X