ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: 'மழை தான் காரணம்' என்கிறார் மாவட்ட கலெக்டர்

Updated : மே 14, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (19)
Advertisement
திருப்பத்துார்: 'ஆம்பூரில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்து உள்ளார்.மத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கையால், பிரியாணி திருவிழா நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், மழை காரணமாக நிறுத்தப்பட்டதாக, கலெக்டர்
ஆம்பூர், பிரியாணி திருவிழா, ஒத்திவைப்பு, மழை,மாவட்ட கலெக்டர்,

திருப்பத்துார்: 'ஆம்பூரில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்து உள்ளார்.மத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கையால், பிரியாணி திருவிழா நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், மழை காரணமாக நிறுத்தப்பட்டதாக, கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில், இன்று(மே 13) முதல் மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடக்க இருப்பதாக, கலெக்டர் அமர் குஷ்வாஹா, சில நாட்களுக்கு முன் அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 'பிரியாணி குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணவு. அதன் பெயரில் திருவிழா நடத்தக் கூடாது' என, துவக்கம் முதலே, ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் அந்த அமைப்பினர் மனு அளித்தனர். அதேசமயம், பிரியாணி திருவிழாவுக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில், பிரியாணி திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக, கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று மாலை திடீரென அறிவித்தார்.


latest tamil newsஇதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: 'தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில், இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, பிரியாணி திருவிழாவில் மக்கள் பங்கேற்க ஏதுவாக அமையாது. எனவே, இன்று நடக்கவிருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.விழா ரத்து ஏன்?


மத மோதல் அதிகம் நடக்கும் ஆம்பூரில், சமீப காலமாக இரு தரப்பினரும் சுமுகமாக உள்ளனர். பிரியாணி திருவிழாவை நடத்த கலெக்டர் அறிவித்து, மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்கும் படி கூறியது பிரச்னையை ஏற்படுத்தியது.மாட்டிறைச்சி இல்லாமல் பிரியாணி விழா நடத்தக் கூடாது என, சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தலைமை செயலகம் வரை சென்றது. விழா நடத்துவதால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும், அரசுக்கு அறிக்கை அனுப்பியது.இதனால் மேலிட உத்தரவுப்படி, மழையை காரணம் காண்பித்து, விழாவை தற்காலிகமாக ஒத்தி வைத்து மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலெக்டருக்கு 'நோட்டீஸ்'


தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், திருப்பத்தூர் கலெக்டருக்கு நேற்று அனுப்பிய நோட்டீஸ்:ஆம்பூர் பிரியாணி திருவிழாவில், பீப் பிரியாணி கூடாது என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளதாக ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான எஸ்.சி., - எஸ்.டி. மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில், பீப் பிரியாணி கூடாது என சொல்வது ஏன்? இதனை ஏன் தீண்டாமை, வகுப்புவாத அடிப்படையில் பாகுபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
14-மே-202202:24:54 IST Report Abuse
BASKAR TETCHANA …..
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
14-மே-202202:23:20 IST Report Abuse
BASKAR TETCHANA இவனை போன்ற ஜால்ரா போடும் அதிகாரிகள் இருக்கும் வரை தமிழர்களை முஸ்லீம் பண்டிகைகள் தடுக்கப்படும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
13-மே-202220:04:21 IST Report Abuse
Ramesh Sargam உண்மையில் மழைதான் காரணமா அல்லது பிரியாணி செய்வதற்கு வைத்திருந்த கோழி, ஆடு, மாடு அழுகிபோய்விட்டதா...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X