தி.மு.க., - பா.ம.க.,வினர் டெண்டர் எடுப்பதில் மோதல்

Added : மே 13, 2022
Advertisement
மொரப்பூரில், வளர்ச்சி பணிகளுக்கான டெண்டரில் கலந்து கொள்ள விடாமல், தி.மு.க.,வினர் தன்னை தாக்கியதாக, பா.ம.க., ஒன்றியக்குழு துணைத்தலைவர் புகார் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கனஹள்ளி பஞ்.,ல், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று பணிகளுக்கு நேற்று டெண்டர் கோரப்பட்டது. இதில், ஒன்றியக்குழு தலைவர் சுமதியின் கணவரும், மொரப்பூர்,


மொரப்பூரில், வளர்ச்சி பணிகளுக்கான டெண்டரில் கலந்து கொள்ள விடாமல், தி.மு.க.,வினர் தன்னை தாக்கியதாக, பா.ம.க., ஒன்றியக்குழு துணைத்தலைவர் புகார் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கனஹள்ளி பஞ்.,ல், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று பணிகளுக்கு நேற்று டெண்டர் கோரப்பட்டது. இதில், ஒன்றியக்குழு தலைவர் சுமதியின் கணவரும், மொரப்பூர், தி.மு.க., ஒன்றிய செயலாளருமான செங்கண்ணன் தரப்பினருக்கும், பா.ம.க.,வை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் பெருமாள் தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டதில், வாய்த்தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது.
இதில், டெண்டரில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்ததுடன், அதிகாரிகள் முன்னிலையில் தி.மு.க.,வினர் தன்னை தாக்கி அலுவலகத்திலிருந்து வெளியேற்றியதாக துணைத்தலைவர் பெருமாள் புகார் தெரிவித்தார். இது குறித்து மொரப்பூர் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, 'ஆளுங்கட்சியினர் செய்யட்டும்' என, இன்ஸ்பெக்டர் கூறியதால், வெளியில் வந்து விட்டதாக பெருமாள் கூறினார்.
இது குறித்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர் செங்கண்ணனிடம் கேட்டபோது அவர், ''பெருமாள் சொல்வது தவறான தகவல். நடந்த சம்பவம் குறித்து நாங்கள்தான் போலீசில் புகார் அளித்தோம். கதிர்நாயக்கனஹள்ளி பஞ்., தலைவர், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். அந்த ஊரை சேர்ந்தவர்கள்தான் டெண்டரில் கலந்து கொண்டனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X