தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : மே 13, 2022 | |
Advertisement
வங்கக்கடலில் உருவாகி உள்ள, அசானி புயலால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், 10:00 மணி முதல் சாரல் மழை பெய்தது. இதனால் ஒரு மணி நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று


வங்கக்கடலில் உருவாகி உள்ள, அசானி புயலால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், 10:00 மணி முதல் சாரல் மழை பெய்தது. இதனால் ஒரு மணி நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால், மலை பிரதேசங்களை போன்று, மிகவும் சில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவியது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
* தர்மபுரி மாவட்டத்தில், நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லுாரி சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற கூலியாட்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், நேற்று மாலை வரை இதேநிலை தொடர்ந்ததால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
* பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பெய்த சாரல் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
* அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை, 7:00 முதல் விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X