கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
இலவச கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவ, மாணவியர், எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி கற்கலாம். இதற்கு தகுதியான மாணவ, மாணவியர் தனியார் பள்ளியில் இலவச படிப்புக்கு விண்ணப்பிக்க, கல்வித்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து, 2 கி.மீ., அருகிலுள்ள தனியார் பள்ளிகளின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகள் எதுவும் இல்லை. கிராம பகுதிகளிலிருந்து, 10 கி.மீ., தொலைவிலுள்ள நகர பகுதிகளில்தான் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் கிராமப்புற மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் சேர்ந்து, இலவச கல்வி திட்டத்தில் படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வீட்டிலிருந்து, 10 கி.மீ., தொலைவிலுள்ள பள்ளிகளில் சேர, வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE