செய்திகள் சில வரிகளில் ... சேலம்

Added : மே 13, 2022
Advertisement
முதியவரிடம் மொபைல்பறித்தவருக்கு 'கவனிப்பு'சேலம், மே 13-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சிரியாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 63. இவர், உறவினரை பார்க்க, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் வந்து, நுழைவாயில் அருகே நின்றிருந்தார். அப்போது, அவரது மொபைல் போனை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார். முருகேசன் கூச்சலிட, சக பயணியர், போனை பறித்தவரை

முதியவரிடம் மொபைல்
பறித்தவருக்கு 'கவனிப்பு'
சேலம், மே 13-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சிரியாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 63. இவர், உறவினரை பார்க்க, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் வந்து, நுழைவாயில் அருகே நின்றிருந்தார். அப்போது, அவரது மொபைல் போனை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார். முருகேசன் கூச்சலிட, சக பயணியர், போனை பறித்தவரை சுற்றிவளைத்து பிடித்து, நன்கு 'கவனிப்பு' செய்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த விஜி, 22, என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதனால், அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை அழைத்த
கணவர் மீது தாக்குதல்
ஆத்துார், மே 13-
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ், 24. தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா, 22. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. கருத்து வேறுபாடால், சங்கீதா கணவரை பிரிந்து, ஆத்துாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 11ல், சங்கீதா வீட்டுக்கு வந்த சதீஷ், குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சங்கீதாவின் உறவினர் தங்கவளவன், 35, உள்பட சிலர், சதீ ைஷ தாக்கியதில் காயமடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், சங்கீதா, தங்கவளவன் உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

போன் திருடியவர்
16 மாதத்துக்கு பின் கைது
சேலம், மே 13-
சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 49. ஆட்டோ டிரைவர். இவர், 2020 டிச., 26ல், மொபைல் போனை ஆட்டோவில் வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். சற்று நேரத்துக்கு பின் சென்றபோது போனை காணவில்லை. ராஜா புகார்படி வழக்குப்பதிந்த போலீசார், 16 மாதங்களுக்கு பின், எஸ்.கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 25, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, போனை மீட்டனர்.

பழனிசாமி பிறந்தநாள் விழா
குவிந்த அ.தி.மு.க.,வினர்
சேலம், மே 13-
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, அக்கட்சி நிர்வாகிகள், சேலத்தில் குவிந்தனர்.
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், 69வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் முன்னிலையில் பழனிசாமி, 'கேக்' வெட்டினார்.
முன்னாள் அமைச்சர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெஞ்சமின், சோமசுந்தரம், நடராஜன், கருப்பண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.

ஆத்துாரில் 17, 18ல் ஜமாபந்தி முகாம்
ஆத்துார், மே 13-
சேலம் மாவட்டத்தில் உள்ள, 14 தாலுகாவிலும், வரும், 17 முதல், 25 வரை, ஜமாபந்தி முகாம் நடக்க உள்ளது.
அதில், ஆத்துாரில், 17, 18ல் நடக்க உள்ள முகாமில், சேலம் கலெக்டர் கார்மேகம் மனுக்களை பெறுகிறார். அதேபோல், 17 முதல், 19 வரை நடக்க உள்ள, தலைவாசல் தாலுகா முகாமில், ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா; கெங்கவல்லி தாலுகா முகாமில், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சத்யபாலகங்காதரன்; பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில், சேலம் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கீதாபிரியா(நிலம்) பங்கேற்க உள்ளனர்.
இம்முகாமில், மக்களிடம் மனுக்களை பெற்று உடனே தீர்வு காணப்படும் என, வருவாய்த்துறையினர்
தெரிவித்தனர்.
19ல் திருவையாறு தொடக்கம்
சேலம், மே 13-
சேலம் சங்கீத வித்வத் சபா சார்பில், ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின், 175ம் ஆண்டு ஆராதனை, 'சேலத்தில் திருவையாறு', வரும், 19ல் தொடங்கி, 4 நாள் நடக்க உள்ளது. சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், 19 காலை, 7:30 மணிக்கு, சபா தலைவர் சுகந்தி சுதர்சனம் தொடங்கி வைக்க உள்ளார். மாலை, கர்நாடக
இன்னிசை கச்சேரி நடக்க உள்ளது. 20 காலை, மங்கள இசையை தொடர்ந்து, மாணவ, மாணவியரின் வாய்ப்பாட்டு வீணை, வயலின் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
மே 21 காலை, வாய்ப்பாட்டு, வயலின் கச்சேரி; 22 காலை பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம், ஸத்குருவின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனை, இரவில் கர்நாடகா கச்சேரி, பரதநாட்டியத்தை தொடர்ந்து ஆஞ்சநேய விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது. வன்னியருக்கு இடஒதுக்கீடு கருத்தரங்கு
சேலம், மே 13-
பா.ம.க., வக்கீல்கள் சமூக நீதிப்பேரவை சார்பில், 'தமிழக வளர்ச்சிக்கு வன்னியருக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு அவசியம்' குறித்து, மேற்கு மண்டல கருத்தரங்கு, சேலத்தில் நடந்தது. பா.ம.க., வடக்கு மாவட்ட செயலர் விஜயராசா தலைமை வகித்தார். அதில், பேரவை தலைவர் பாலு, மாநில செயலர்கள் சரவணன், பாலாஜி, வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி பேசினர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்துார், ஈரோடு, கோவை, திருப்பூரை சேர்ந்த வக்கீல்கள்
பங்கேற்றனர்.
ஆஞ்சநேயர் கோவிலில்
ராமநவமி உற்சவம்
வீரபாண்டி, மே 13-
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நடப்பதை போன்று, சேலம், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம், சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. 10 நாள் நடத்தப்படும் உற்சவம் கடந்த, 10ல் தொடங்கியது.
வரும், 21 வரை, தினமும் மாலை, ராமருக்கு விதவித அலங்காரங்கள் செய்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 18ல் திருக்கல்யாண உற்சவம், 19ல் ஊஞ்சல் சேவை, 20ல் அனுமன் விடையாற்றி உற்சவம், 21ல் சீதாதேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் அனுமன் ஆகியோருடன் ராமர் பட்டாபி ேஷக கோலத்தில் காட்சியளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து
வருகின்றனர்.

போலீஸ் வேன் மோதி
தொழிலாளி படுகாயம்
ஆத்துார், மே 13-
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், நெடுமானுாரை சேர்ந்தவர் பாண்டியன், 43. ஓசூரில் மூட்டை துாக்கும் தொழில் செய்கிறார். நேற்று ஓசூரில் இருந்து, 'ஸ்பிளண்டர்' பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார். மதியம், 3:30 மணிக்கு, ஆத்துார், உப்பு ஓடை பாலத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து கோவைக்கு, குற்றவாளிகளை அழைத்துச்சென்றுகொண்டிருந்த, கோவை மாவட்ட போலீஸ் வேன், பைக் மீது மோதியது. அதில் பாண்டியன் படுகாயமடைந்தார். அவரை, போலீசார் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாராயம் விற்றவர் மீது
பாய்ந்தது குண்டாஸ்
ஆத்துார், மே 13-
தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, ராமசேஷபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 31. சாராய வியாபாரியான இவரை, கடந்த ஏப்., 11ல், ஆத்துார் மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அங்குள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அவர் மீது, 4 சாராய வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் கலெக்டர் கார்மேகத்துக்கு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். அதையேற்று, கலெக்டர் உத்தரவிட, குண்டாஸ் பாய்ந்ததால், நேற்று சேலம் மத்திய சிறையில் விக்னேஷ் அடைக்கப்பட்டார்.

கொலையாளிகள் கைது
போலீசாருக்கு பாராட்டு
சேலம், மே 13-
சேலம், இரும்பாலை அருகே பெருமாம்பட்டி, கில்லான் வட்டத்தில் வசித்த, உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், 22, அவரது மனைவி வந்தனா குமாரி, 21, உறவினர் சன்னிகுமார், 16, ஆகியோர், 2020 மார்ச், 8ல் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய உத்தரபிரதேசம், ஆக்ராவை சேர்ந்த தினேஷ், 34, ரிகான் குரோஷி, 25, ஆகியோர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் ஜெய்ஷல்குமார் தலைமையில் தனிப்படை போலீசார், உத்தரபிரதேசம் சென்று, கடந்த, 9ல் கைது செய்தனர். இதனால், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாதா, நேற்று சான்றிதழ், கேடயம் வழங்கி, தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X