சேலம் மாவட்டத்தில், 8,364 கடைகள், நிறுவனங்கள், உரிமம் பதிவு செய்ய வேண்டும். அதற்காக, 22 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்க
உள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:
ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும் கடைகள், நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய்; 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கடைகள், நிறுவனங்கள், உரிமம் பெற வேண்டும். அதற்கு விண்ணப்ப கட்டணம், 2,000 முதல், 5,000 ரூபாய்.
மாவட்டத்தில் உள்ள, 5,762 நிறுவனங்களில், 5,495 உரிமம் பெற்றுள்ளன. இது, 95 சதவீதம். மீதி, 267 நிறுவனங்கள் உரிமம் பெற அல்லது புதுப்பிக்க வேண்டும். அதேபோல், 27 ஆயிரத்து, 199 கடைகளில், 19 ஆயிரத்து, 102 பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 70 சதவீதம். 8,097 கடைகள் பதிவு செய்ய வேண்டும். மொத்தமாக, கடைகள், நிறுவனங்கள் - 8,364, உரிமம், பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்காக, மே, 13ல்(இன்று), 18 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சியில் உள்ள, நான்கு மண்டல அலுவலகங்களில் உரிமம், பதிவுக்கு சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதனால், கடைக்காரர்கள், நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், 6 மாத சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE