புதிய அமராவதி பாலத்தில் போடப்பட்டுள்ள சாலை, சமன் இல்லாமல் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியிலிருந்து, திருமாநிலையூர் பகுதி இடையே அமராவதி ஆறு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது பழைய மற்றும் புதிய பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பழைய பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் வழியாக தினமும் ஆயிரத்துக்கும்மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய பாலத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு பாலத்தின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, இருவழி போக்குவரத்து நடந்து வருகிறது.
இதில், திருமாநிலையூர் பகுதியிலிருந்து, லைட்ஹவுஸ் பகுதியை நோக்கி வரும் பாலத்தின் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், அணுகு சாலையை இடித்து விட்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், அணுகு சாலையில் சமன்படுத்தாமல் இணைக்கப்பட்டுள்ளதால், தார் பூசப்பட்ட பகுதியின் இடதுபுறம் மேடாகவும், வலது புறம் பள்ளமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE