கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு தொழில் தொடங்க, 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனுதவி வழங்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மற்றும் குளித்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தங்க தந்தை திட்டத்தில், மே மாதம் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடக்கிறது. மே, 13ல், கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை; மே, 27ல், குளித்தலை அரசு மருத்துவமனையில் குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஏற்கும் ஆண்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படும். தகுதி அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா, வீட்டில் உள்ள முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை, சிறு,குறு நடுத்தர தொழில் தொடங்க, 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள், இலவச கால்நடை கொட்டகை, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்துடன் நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும். மேலும், 94439-42304, 99445-23334 மற்றும் 94439-04031 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில்
தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE