செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

Added : மே 13, 2022
Advertisement
பிரேக் பிடிக்காததால் வளைவில் கவிழ்ந்த கார்சத்தியமங்கலம், மே 13-ஆசனுார் அருகே வளைவில பிரேக் பிடிக்காததால், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் நளின் குமார், 26; சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ் நகருக்கு சொந்த வேலையாக சுவிப்ட் காரில் நேற்று மதியம் புறப்பட்டார். ஆசனுார் அருகே செம்மண்திட்டு என்ற இடத்தில், வளைவில் பிரேக்

பிரேக் பிடிக்காததால்
வளைவில் கவிழ்ந்த கார்
சத்தியமங்கலம், மே 13-
ஆசனுார் அருகே வளைவில பிரேக் பிடிக்காததால், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் நளின் குமார், 26; சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ் நகருக்கு சொந்த வேலையாக சுவிப்ட் காரில் நேற்று மதியம் புறப்பட்டார். ஆசனுார் அருகே செம்மண்திட்டு என்ற இடத்தில், வளைவில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வலதுபுற தடுப்பு வேலிக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதில் அவர் உள்பட மூவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மாணவியை கடத்திய
வாலிபர் மீது போக்சோ
மொடக்குறிச்சி, மே 13-
மாணவியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி, கடத்திச் சென்ற வாலிபர் மீது, போக்சோ சட்டம் பாய்ந்தது.
அரச்சலுார் அருகேயுள்ள, 60 வேலம்பாளையத்தை சேர்ந்த, 16 வயது மாணவியில் பள்ளியில் படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏசுராஜ் மகன் கவின், 22; திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, மாணவியை கடத்தி சென்றுள்ளார். மாணவியின் தந்தை புகாரின்படி, போக்சோ சட்டத்தில் போலீசார் கவினை கைது செய்தனர்.
மைனர் சிறுமியுடன் திருமணம்;
வாலிபர் போக்சோவில் கைது
காங்கேயம், மே 13-
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவிலை சேர்ந்தவர் மணிகண்டன், 21; இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். தற்போது சிறுமி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, 17 வயது என்பது தெரியவந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
செவிலியர் தின பேரணி
ஈரோடு, மே 13-
ஈரோடு, தாலுகா அலுவலக வளாகம், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் இருந்து, தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர் தின பேரணி சென்றனர்.
மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசினார். செவிலியர் தினத்தில் உலகளாவிய ஆரோக்கியத்தை பாதுகாப்பது. செவிலியர்களின் உரிமைகளை மீட்பது தொடர்பாக பேசினர். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் நிறைவு செய்தனர். நிர்வாகிகள் ராக்கிமுத்து, விஜயமனோகரன், பெருமாள், சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மணமான இளம்பெண்
மாயம்; தாய் புகார்
ஈரோடு, மே 13-
ஈரோடு, பழையபாளையம், செல்வம் நகரை சேர்ந்தவர் ஜீவிதா, 20; ஒன்றரை ஆண்டுக்கு முன், பவானியை சேர்ந்த சுபாஷூடன் திருமணம் நடந்தது.
குடும்ப தகராறால், 15 நாட்களுக்கு முன் கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் வேலை தேடி செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜீவிதாவின் தாய் செல்வி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

மாணவி கர்ப்பம்:
ஆசாமிக்கு காப்பு
மொடக்குறிச்சி, மே 13-
பாசூர் அருகே, மாணவியை ஆசை காட்டி கர்ப்பமாக்கியவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பாசூர் பகுதியை சேர்ந்த, ௧௭ வயது சிறுமி பிளஸ் ௨ படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர், வீட்டில் வாந்தி எடுத்தார். பெற்றோர் விசாரித்தபோது கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த தந்தை, மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தார். மாணவியை கர்ப்பமாக்கிய தாமோதரனை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

துாய்மை பணியாளர் பணி
கல்வி விடுதியில் அழைப்பு
ஈரோடு, மே 13-
ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் உள்ள கல்வி விடுதிகளில், காலியாக உள்ள பகுதநேர துாய்மை பணியாளர் பணியிடம் நிரப்பப்படுகிறது.
பகுதி நேர துாய்மை பணியாளர் - ஆண்கள், 13 பேர், பெண்கள், 13 பேர் என நிரப்ப உள்ளனர். முற்றிலும் தொகுப்பூதிய அடிப்படையிலானது. இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். இப்பணிக்கு வருவோர், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். உரிய சான்றுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம், 5ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிலாளியிடம் வழிப்பறி
பெருந்துறை, மே 13-
பெருந்துறை அருகே, வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளியிடம், மூன்று பேர் கும்பல், பணம் மற்றும் மொபைல்போனை பறித்து சென்றனர்.
துடுப்பதி, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மணி, 33; திருப்பூர் கார்மெண்ட்ஸ் தொழிலாளி. வேலை முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் டூவீலரில் வீடு திரும்பினார். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகில் வந்தபோது, பைக்கில் வந்த மூவர் மணியை தள்ளினர். அவரிடம் இருந்த, 700 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு மொபைல்போனை பறித்து சென்றுள்ளனர். மணி புகாரின்படி, பெருந்துறை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X