*புன்செய்புளியம்பட்டியில், நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, 20 எருமை, 150 கலப்பின மாடு, 80 கன்றுகள், 250 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள், 18 முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 24 முதல், 42 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 22 ஆயிரம் முதல், 48 ஆயிரம், சிந்து,16 ஆயிரம் முதல், 42 ஆயிரம், நாட்டுமாடு, 40 முதல், 82 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள், 4,000 முதல், 16 ஆயிரம் வரை விற்பனையானது. கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
இதேபோல், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 10 கிலோ வெள்ளாடு, 5,000 முதல், 6,000 ரூபாய்; ஐந்து கிலோ முதல், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 4,000 முதல், 5,000 ரூபாய் வரை விற்பனையானது. அனைத்து கால்நடைகளும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 5,௦௦௦ ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 30 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 200 எருமை; 30 ஆயிரம் ரூபாய் முதல், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 400 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்தான கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 35, நேந்திரன், 36 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 390, தேன்வாழை, 410, செவ்வாழை, 600, மொந்தன், 240, பச்சைநாடான், 310, ரஸ்த்தாளி, 400, ரொபஸ்டா, 310 ரூபாய்க்கும் விலைபோனது. வரத்தான, 4,280 வாழைத்தார்களும், 4.57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
*புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, பூவன், ரஸ்தாளி, செவ்வாழை ரகம் என, 500க்கும் மேற்பட்ட வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பூவன் வாழைத்தார், 250 முதல் 350 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய், கற்பூரவள்ளி, 450 ரூபாய்க்கு விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 807 மூட்டைகள் வரத்தாகின. ஒரு கிலோ, 55.௭௦ ரூபாய் முதல், 67.30 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 27 ஆயிரம் கிலோ நிலக்கடலை, 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அறச்சலுார் வினோபா நகர் துணை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 6,103 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 24.௪௦ ரூபாய் முதல், 29.5௬௦ ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 2,266 கிலோ எடையுள்ள தேங்காய், 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.