காஷ்மீரில் இளைஞர் படுகொலை: பண்டிட்கள் தொடர் போராட்டம்

Updated : மே 14, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் அச்சமுதாயத்தினர் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.காஷ்மீரில் பல்வேறு இடங்களில் காஷ்மீர் பண்டிட்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் அச்சமுதாயத்தினர் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.



latest tamil news


காஷ்மீரில் பல்வேறு இடங்களில் காஷ்மீர் பண்டிட்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 2010ம் ஆண்டு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின்படி பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில் நேற்று மாலை புத்கம் மாவட்டத்தின் சதூரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த ராகுல் பட்(36) என்பவரை சுட்டனர். அதில் படுகாயமடைந்த ராகுல் பட் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.


latest tamil news


இது குறித்து தகவல் அறிந்ததும், முகாம்களில் வசித்த பண்டிட் சமுதாயத்தினர், பல்வேறு இடங்களில் இரவு முதல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பேரணியிலும் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசு மற்றும் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
13-மே-202221:48:00 IST Report Abuse
Venugopal S காஷ்மீர் பண்டிட்களுக்கு நியாயம் கிடைக்காது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-மே-202217:17:55 IST Report Abuse
J.V. Iyer பாஜக ஆட்சியில் இன்னும் கொடுமை நடப்பது நம்பமுடியவில்லை. பயங்கரவாதிகளையும், அதற்கு துணைபோகும் எல்லோரையும் துடைத்து எறியவேண்டும்.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
13-மே-202217:12:24 IST Report Abuse
ANANDAKANNAN K ஒன்றை தமிழ்நாடு திராவிட கண்மணிகள் புரிந்தால் பரவில்லை, நமது முதல்வர் சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை படிக்கும் போது என்ன சொன்னார், குற்றம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் நடிக்கிறது என்றுதானே சொன்னார், ஆனால் திரு.பழனிசாமி என்ன சொன்னார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது அதனால் நாங்கள் உங்கள் பதிலுரையை கேட்க விரும்பவில்லை என்று சொல்லி வெளிநடப்பு செய்தார், அதுபோல தான் காஷ்மீர்ல நடக்குது, மேலும் பண்டிகள் இன்று வெளியில் வந்து போராட்டம் என்ற தங்களது ஜனநாயகத்தை ஆற்ற முடிகிறது, ஒரு பத்து வருடத்திர்ற்கு முன் யார் செத்துப்போனது சடலம் எங்கு கிடக்குது, தன் வீட்டில் ஒரு ஆல் காணாமல் போனால் அவரை பார்க்கத்தான் முடியுமா அல்லது செத்து விட்டார் என்று தான் நினைக்க முடியுமா ? நிலைமை இன்று நூறு சதவீதம் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது ,ஆனால் என்பது சதவீதம் நன்றாக உள்ளது.எதுவும் உடனே மாறாது, இது நேரு காலத்து பிரச்னை சுமார் எழுபது வருடம் சட்டத்தால் தீர்க்க முடியாத ஓன்று, வரும் காலத்தில் சரி செய்யலாம்,ஆனால் நூறு சதவீதம் என்பது ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X