மருத்துவ மாணவர்களுக்கு நீதி வேண்டும்: ராகுல் வேண்டுகோள்

Updated : மே 14, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், அரசு அவர்களை நசுக்காமல் நீதி வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான முதுகலை நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க
Congress, Rahul, NEETPG2021, POSTPONENEETPG2022, காங்கிரஸ், ராகுல், நீட், முதுகலை நீட், தேர்வு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், அரசு அவர்களை நசுக்காமல் நீதி வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான முதுகலை நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், ‛முதுகலை நீட் கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய அவர்களின் கோரிக்கை நியாயமானது. மருத்துவர்கள் கொரானா காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். அரசு அவர்களை நசுக்காமல் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202204:53:32 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முதுகலை என்றால் என்ன என்று ராகுல் சொல்வாரா?+
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
13-மே-202220:27:43 IST Report Abuse
Ramesh Sargam மருத்துவர்கள் கொரானா காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். உண்மை. ஆனால், நீங்கள் இரவு பகல் பார்க்காமல் dirty politics செய்துகொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-மே-202219:04:52 IST Report Abuse
raja நேபாளத்துல சீன தூதர் ( உளவாளி) கிட்ட என்னென்ன இந்தியாவின் ரகசிய ஆவணங்களை கொடுத்துவிட்டு வந்தான் இந்த பப்புன்னு இந்திய மக்கள் கேட்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X