சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 13, 2022
Advertisement
அறிவியல் ஆயிரம்இடம் பெயரும் பறவைகள் தினம்உலகளவில் ஆண்டுதோறும் 4000 பறவை இனங்கள் இடம் பெயர்கின்றன. ஆண்டுக்கு இருமுறை குளிர்காலத்தில், வெப்பமான காலநிலையை தேடி இடம்பெயர்கின்றன. இவ்வகை பறவைகள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே மாதம் இரண்டாவது சனி (மே 14) சர்வதேச இடம்பெயரும் பறவைகள் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இடம் பெயரும் பறவைகள்

அறிவியல் ஆயிரம்
இடம் பெயரும் பறவைகள் தினம்
உலகளவில் ஆண்டுதோறும் 4000 பறவை இனங்கள் இடம் பெயர்கின்றன. ஆண்டுக்கு இருமுறை குளிர்காலத்தில், வெப்பமான காலநிலையை தேடி இடம்பெயர்கின்றன. இவ்வகை பறவைகள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே மாதம் இரண்டாவது சனி (மே 14) சர்வதேச இடம்பெயரும் பறவைகள் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இடம் பெயரும் பறவைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சூழலியல் முக்கியத்துவம், பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
தகவல் சுரங்கம்
பேட்டரிக்கு உதவும் அமிலம்
சல்பர், ஆக்சிஜன், ைஹட்ரஜன் ஆகியவை கலந்தது சல்ப்யூரிக் அமிலம். இதன் வேதியியல் குறியீடு 'எச்2எஸ்ஓ4' இந்த அமிலம் கார் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நிறமற்ற, மணமற்ற, பிசுபிசுப்பான திரவம். இது நீரில் எல்லா அளவிலும் கலந்து விடும். இது அனைத்து உலோகங்களுடனும் அவற்றின் ஆக்சைடுகளுடனும் தொடர்பு கொள்கிறது. இது இல்லாமல் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியாது. உரம் தயாரித்தல், கனிமங்களை பிரித்தெடுத்தல், வெடிமருந்து தயாரித்தல் போன்றவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X