ஸ்ரீபெரும்புதுார்:இறக்குமதி செய்யப் படும் நீர்வாழ் உயிரினங்களின் நோய் கண்டறியும் ஆய்வக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் 3 ஏக்கர் பரப்பளவில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய மீன்வளத்துறை சார்பில், 19.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. முதல் கட்டமாக 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகத்தின் கட்டுமான பணிகள் 2021ம் ஆண்டு ஜனவரியில் துவங்கியது. மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இறக்குமதி செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களை இந்த ஆய்வகத்தில் தனிப்மைப்படுத்தி நோய் தொற்று உள்ளனவா என பரிசோதனை செய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் அமைய உள்ளது. ஆய்வகத்தின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. மற்ற பணிகள் விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE