காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கு 4,529 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன என, மாவட்ட எஸ்.பி., சுதாகர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதனால் தொழிற்சாலை நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஆட்கள் கடத்தல், வழிப்பறி, கொலை போன்ற குற்றச்செயல்கள் நடக்கின்றன.இந்த புகார்களை தொடர்ந்து மாவட்ட காவல்துறை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பட்டியலை தயார் செய்து, அவர்களை கண்காணிக்க துவங்கினர்.
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர் கண்காணிப்பு மூலம் மாவட்டத்தில் 538 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளனர். கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கடந்த ஆண்டு மட்டும் 78 பேரும், நடப்பாண்டு 15 பேரும் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடிக்க உதவியாக இருக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும் 622 இடங்களில், 2,259 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுதும், 1,585 இடங்களில் 4,529 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றங்களை விரைவில் கண்டுபிடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்குவதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த வசதி இல்லாத காலங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது கேமராவில் உள்ள பதிவை பார்த்து எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.
கேமராக்கள் பொருத்தப்பட்டதன் வாயிலாக குற்றவாளிகளுக்கு அச்சமும், பொது மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. தற்போது குற்றங்கள் குறைந்துள்ளது. எம்.சுதாகர், மாவட்ட எஸ்.பி., காஞ்சிபுரம்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விபரம்:காவல் நிலையம் இடம் கேமராக்கள்சிவகாஞ்சி 214 1,543விஷ்ணு காஞ்சி 86 305தாலுகா 322 411பா. செ.சத்திரம் 152 608வாலாஜாபாத் 112 106மாகறல் 30 48உத்திரமேரூர் 133 341பெருநகர் 50 147சாலவாக்கம் 119 163ஸ்ரீபெரும்புதுார் 124 339சு.வா. சத்திரம் 73 181ஒரகடம் 170 337மொத்தம் 1,585 4,529
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE