வாலாஜாபாத்:உலர்ந்த 'எம்--சாண்ட்' ஏற்றி செல்லும் லாரிகளால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் அடுத்த, பழவேலி, திருமுக்கூடல் உள்ளிட்ட பல பகுதிகளில் எம்--சாண்ட் என, அழைக்கப்படும் கல் அரவை நிலையங்கள் இயங்கி வருகின்றன.இங்கிருந்து, டிப்பர் லாரிகளில் காஞ்சிபுரம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, எம்--சாண்ட் லோடு ஏற்றி அனுப்புகின்றனர்.
பெரும்பாலான டிப்பர் லாரி ஓட்டுனர்கள் உலர்ந்த எம்--சாண்டை ஏற்றி செல்கின்றனர். டிப்பர் லாரி மீது, தார்பாலின் போட்டு எடுத்து செல்வதில்லை. மேலும், எம்--சாண்ட் காற்றில் பறக்காமல் இருக்க தண்ணீரை அடித்து, ஈரமாக்கி எடுத்து செல்வதில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுபோல நேரங்களில், உலர்ந்த எம்--சாண்ட் டிப்பர் லாரியில் இருந்து காற்றில் துாசாக பறக்கிறது.
இதனால், டிப்பர் லாரிகளை பின்தொடர்ந்து செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, எம்--சாண்ட் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளில் தார்பாலின் மற்றும் ஈர எம்--சாண்ட் எடுத்து செல்ல வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE