காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் துவங்க உள்ளதாக, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். பட்டா, சிட்டா, நிலப்பிரச்னை என வருவாய் துறை சம்பந்தப்பட்ட அனைத்து வகையான குறைகளுக்கும், வருவாய் தீர்வாய முகாமில் மனு அளிக்கலாம்.
வருவாய் தீர்வாயம் துவங்கும் முன்பாகவே, அந்தந்த தாலுகாவின் தாசில்தார்களிடம், முன்கூட்டியே பொதுமக்கள் மனு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாலுகா முகாம் நடைபெறும் நாள் வருவாய் தீர்வாய அலுவலர்
வாலாஜாபாத் - ஜூன் 1,2,3,7,8 - கலெக்டர் ஆர்த்தி
உத்திரமேரூர் - ஜூன் 1,2,3,7,8,9,10,14 டி.ஆர்.ஓ., சிவருத்ரைய்யா
காஞ்சிபுரம் ஜூன் 1,2,3,7,8,9 ஆர்.டி.ஓ., ராஜலட்சுமி
ஸ்ரீபெரும்புதுார் - ஜூன் 1,2,3,7,8 - ஆர்.டி.ஓ., சைலேந்திரன்
குன்றத்துார் - ஜூன் 1,2,3,7,8,9 - டி.எஸ்.ஓ., பாபு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE