காஞ்சி/ புகார் பெட்டி 

Added : மே 13, 2022 | |
Advertisement
பயணியர் நிழற்கூரை தேவைவாலாஜாபாத் - வண்டலுார் செல்லும் சாலையில், நத்தாநல்லுார் கிராம பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சாலை சமீபத்தில், நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தப் பட்டு உள்ளது. வாலாஜாபாத் மார்க்கமாக இருந்த பயணியர் நிழற்கூரை அகற்றப்பட்டது. அதன் பின்னர் புதிதாக கட்டிகொடுக்கவில்லை. இதனால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர் மரத்தடியிலும்,
 காஞ்சி/ புகார் பெட்டி 

பயணியர் நிழற்கூரை தேவை
வாலாஜாபாத் - வண்டலுார் செல்லும் சாலையில், நத்தாநல்லுார் கிராம பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சாலை சமீபத்தில், நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தப் பட்டு உள்ளது. வாலாஜாபாத் மார்க்கமாக இருந்த பயணியர் நிழற்கூரை அகற்றப்பட்டது. அதன் பின்னர் புதிதாக கட்டிகொடுக்கவில்லை. இதனால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர் மரத்தடியிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இருபுறமும் பயணியர் நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும்.
-எம்.ராமு, நத்தாநல்லுார்.
கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றப்படுமா?
உத்திரமேரூரில், தெற்கு ரெட்டி தெருவில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்படுகிறது. இந்த வங்கியில், கிழிந்த ரூபாய் நோட்டு களை மாற்ற எடுத்து சென்றால், வங்கி கிளையில் பணியாற்றும் ஊழியர்கள், மாற்றி தர மறுக்கின்றனர்.ஏன் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பெறுவதில்லை என கேட்டால், ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிழிந்த ரூபாய் நோட்டுகளே தங்களிடம் நிறைய உள்ளதென, முரணான பதில் கூறி திரும்ப அனுப்புகின்றனர். கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியின் கிளையிலும் மாற்றலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும், இப்பகுதி வங்கி கிளையில் மாற்றி தர மறுப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, உத்திரமேரூர்.
நடைபாதை அமைக்கப்படுமா?
உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை முதல், தாலுகா அலுவலகம் வரை உள்ள பஜார் வீதியில், பஸ்நிலையம், வங்கி, கோவில், மசூதி, வணிக வளாகம் நிறைந்து, நெரிசல் மிகுந்த குறுகலான சாலையாக உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையின் இருபுறமும் கடைகள் நெருக்கமாக உள்ளன. பஜார் வீதியில் நடைபாதை இல்லாததால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பஜார் வீதி சாலையை அகலப்படுத்தி, நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்
.மணிக்கூண்டு பயன்பாட்டிற்கு வருமா?
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், கடந்த 1998ல் 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டபோது, நான்கு திசைகளிலும் நேரத்தை காட்டும் வகையில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் பேருந்து பயணியருக்கும், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில், மணிக்கூண்டு பழுதடைந்து உள்ளது. இதனால், பேருந்துக் காக காத்திருக்கும் பயணியர் நேரத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, பஸ்நிலைய மணிக்கூண்டில் கடிகாரம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
த.கண்ணன், காஞ்சிபுரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X