சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

கடலையும், எம்.பி.,யின் கவலையும்!

Added : மே 13, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கடலையும், எம்.பி.,யின் கவலையும்!பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. ஈரோடு ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'சட்டியில் வறுத்து தரும் நிலக்கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுரையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து காரில் வந்தப்ப, டிரைவரிடம் கடலை வியாபாரியை கண்டால்
பக்க வாத்தியம்


கடலையும், எம்.பி.,யின் கவலையும்!



பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. ஈரோடு ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'சட்டியில் வறுத்து தரும் நிலக்கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுரையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து காரில் வந்தப்ப, டிரைவரிடம் கடலை வியாபாரியை கண்டால் நிறுத்தும்படி கூறினேன்.
'ஈரோடு வரும் வரை, நிலக்கடலை கிடைக்கவே இல்லை. இதை சிரிப்பதற்காக சொல்லவில்லை. 'மல்டி நேஷனல்' கம்பெனிகளின் வருகையால், அனைத்து குறுந்தொழில்களும் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர வேண்டும்' என்றார்.
ஆடை உற்பத்தியாளர் ஒருவர், 'தனக்கு கிடைக்காத கடலையை உதாரணமா வச்சே, சிறுதொழில் அழியுதுங்கிற கவலையை எம்.பி., கனகச்சிதமா விளக்கிட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மே-202215:21:16 IST Report Abuse
D.Ambujavalli அதுதான் வெளிநாடுகளுக்கு குடும்ப சகிதம் போய் தொழில் வளர்த்தாகிறதே, உள்ளூர் கடலை, மாங்காய் பத்தை வியாபாரி அழிந்தால் என்ன மோசம் போகிறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X