ரயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்

Added : மே 13, 2022 | |
Advertisement
அரக்கோணம்:அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரால் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஏழாவது பிளாட்பாரத்தில் நேற்று இரவு 11:30 மணிக்கு மின்சார ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயில் நள்ளிரவு 12:00 மணிக்கு சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும். நள்ளிரவு என்பதால் கூட்டம்
ரயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்

அரக்கோணம்:அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரால் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஏழாவது பிளாட்பாரத்தில் நேற்று இரவு 11:30 மணிக்கு மின்சார ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயில் நள்ளிரவு 12:00 மணிக்கு சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும். நள்ளிரவு என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.
அப்போது, முதியவர் ஒருவர் அந்த மின்சார ரயில் மீது ஏறி நின்று கொண்டு கூச்சலிட்டார். இதை பார்த்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். அப்போது ரயில் பெட்டியின் மீது செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியை பிடித்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முதியவர் கூறி, இங்கும், அங்கும் ஆறு பெட்டிகள் மீது முதியவர் ஓடினார்.
அப்போது அவர் கை மின்சார ஒயர் மீது தொட்டு விடும் துாரத்தில் இருந்தது. போலீசார் அவரை கீழே இறங்கும்படி கூறினர். அவர் மறுத்தார். இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளும், போலீசாரும் சேர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது திடிரென மின் கம்பியை தொடப் போனார். முதியவருக்கு தெரியாமல், ரயில்வே ஊழியர்கள் அந்த கம்பத்தில் இருந்து மின்சார ரயிலுக்கு வரும் மின் இணைப்பை துண்டித்தனர். போலீசார் ரயில் பெட்டியில் ஏறி முதியவரை கீழே இறக்க முயன்றனர். என்னை பிடித்தால் கீழே குதித்து விடுவேன் என மீண்டும் முதியவர் மிரட்டினார்.இதனால் 10 போலீசார் பெட்டியின் மீது ஏறி குண்டு கட்டாக முதியவரை துாக்கி கயிறு கட்டி கீழே இன்று அதிகாலை 5:00 மணிக்கு இறக்கினர்.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டு மன நல சிகிச்சை அளிக்க ப்பட்டது. அவரிடமிருந்த ஆதார் கார்டடை கொண்டு நடத்திய விசாரணையில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த இளங்கோவன், 60, விவசாயி, அவரது நிலத்தை மகன்கள் அபகரித்துக் கொண்டு விரட்டி விட்டதால் மன நலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்ததும், பல நாட்கள் நடந்தே அரக்கோணம் வந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதனால் சென்னை சென்ரலுக்கு செல்லும் மின்சார ரயில் பல மணி நேரம் தாமதமாக சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X