சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 13, 2022
Advertisement
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: தேசத்துரோகம் தொடர்பான இந்திய கிரிமினல் சட்டம் 124 ஏ பிரிவை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டப் பிரிவு, மிகவும் தவறாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை; ரத்து செய்ய வேண்டும். காலில் முள் தைத்தால்,

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: தேசத்துரோகம் தொடர்பான இந்திய கிரிமினல் சட்டம் 124 ஏ பிரிவை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டப் பிரிவு, மிகவும் தவறாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை; ரத்து செய்ய வேண்டும். காலில் முள் தைத்தால், முள்ளை அகற்ற வேண்டுமே தவிர, காலை வெட்டி எறிய முடியுமா? அதுபோல சட்டத்தில் இருக்கும் குறைகளை களைந்து, அதை நியாயமான முறையில் அமல்படுத்த ஆலோசனைகள் கூறலாமே!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: கடலுார் மாவட்டம், பெரியகுப்பம் பகுதியில், காவல் துறையினர் மீது கொள்ளையர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருப்பது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில், குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல் துறை மானிய கோரிக்கை மீது, முதல்வர் பெருமையாகப் பேசி, 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.இதுக்கும் சேர்த்து தான், 'ஆங்காங்கே நடக்கும், ஒரு சில சம்பவங்களை வைத்து, காவல் துறையை ஒட்டுமொத்தமா குறை சொல்லக் கூடாது'ன்னு முதல்வர் ஏற்கனவே, 'பிட்'டை போட்டு வச்சிருக்காரே!


தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தேச விரோத சட்டம் என்ற இந்திய குற்றவியல் சட்டத்தின், 124 ஏ பிரிவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, அதை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க, சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு புகுத்த உள்ளது. ஆனால், இச்சட்டத்தை நீக்க வேண்டும் என, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் குரல் எழுப்பியது வேடிக்கையாக உள்ளது. கழகங்கள் போல, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் நீலிக்கண்ணீர் வடிக்காமல், மத்திய அரசுக்கு ஆதரவு தந்து, இச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தேச விரோத சட்டத்தை பெரும்பாலும், அதிகமாக பயன்படுத்தியதே காங்கிரஸ் அரசு தான். இப்போது, எதிர்க்கட்சி என்பதால் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் எதிர்ப்பதை நாமும் எதிர்த்தாகணும் என்ற, 'அஜெண்டா'வில் இருப்பதால் காம்ரேட்டுகளும் அதற்கு ஆதரவு தர்றாங்க போல!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசு துறைகளில், இரண்டாம் நிலை சார் - பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு, மாறுதல் வாயிலாக நியமிக்கப்படும் போது, எம்.பி.சி., பிரிவினருக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இது, தி.மு.க., அரசின் சமூக நீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரான செயல். சரி விடுங்க... துரைமுருகன் சொன்ன மாதிரி, இந்த குறைகளை எல்லாம் பா.ம.க., ஆட்சிக்கு வந்து அன்புமணி முதல்வரானதும், நிவர்த்தி பண்ணிடலாம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X