நிழற்குடை இல்லாததால் மப்பேடு பயணியர் அவதி

Added : மே 13, 2022 | |
Advertisement
மப்பேடு:மப்பேடு ஊராட்சியில், நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், காவல் நிலையம் அருகே, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தை பயன்படுத்தி பொதுமக்கள், சுங்குவார்சத்திரம், சென்னை மார்க்கமாக சென்று
 நிழற்குடை இல்லாததால் மப்பேடு பயணியர் அவதி

மப்பேடு:மப்பேடு ஊராட்சியில், நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், காவல் நிலையம் அருகே, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தை பயன்படுத்தி பொதுமக்கள், சுங்குவார்சத்திரம், சென்னை மார்க்கமாக சென்று வருகின்றனர்.இந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை இல்லாததால், பயணியர் மற்றும் மாணவ - மாணவியர், கோடை வெயிலில் நிற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மப்பேடு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X