இதே நாளில் அன்று

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022
Advertisement
மே 14, 1923 சுதந்திரத்திற்கு முன், இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்த போது, வங்க தேசத்தின் பரீத்பூரில், 1923ல், இதே நாளில் பிறந்தவர் மிருணாள் சென். சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்ததும், மேற்படிப்புக்காக கோல்கட்டா வந்தார். பட்டப்படிப்பின் போது, 'பிலிம் அஸ் ஆர்ட்' என்ற புத்தகத்தை படித்ததால், இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1955ல், ராத் போர் என்ற திரைப்படத்தை
 இதே நாளில் அன்று

மே 14, 1923

சுதந்திரத்திற்கு முன், இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்த போது, வங்க தேசத்தின் பரீத்பூரில், 1923ல், இதே நாளில் பிறந்தவர் மிருணாள் சென். சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்ததும், மேற்படிப்புக்காக கோல்கட்டா வந்தார். பட்டப்படிப்பின் போது, 'பிலிம் அஸ் ஆர்ட்' என்ற புத்தகத்தை படித்ததால், இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1955ல், ராத் போர் என்ற திரைப்படத்தை இயக்கினார். அடுத்தடுத்து, நீர் ஆகாஷெர் நீச்சே, பைஷே சிரவன் போன்ற படங்களை இயக்கினார். இவரின், மூன்றாவது படத்துக்கு உலக அங்கீகாரம் கிடைத்தது.கோல்கட்டா நகரின் பழமை, பெருமை, வறுமை, அழகியல் உள்ளிட்டவற்றை, தன் படங்களின் வழியே பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வங்க மொழி திரைப்பட உலகின் மூன்று பிரம்மாக்கள் வரிசையில், சத்ய ஜித்ரே, ரித்விக் கட்டக்கிற்குப் பின், இவரின் பெயர் தான் உள்ளது. ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்க மொழிகளில், 34 திரைப்படங்கள், நான்கு ஆவணப்படங்களை இயக்கியுள்ள மிருணாள் சென்னுக்கு, பத்ம பூஷண், தாதாசாகிப் பால்கே விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. மிருணாள் சென், தன், 95வது வயதில், 2018 டிசம்பர், 30ல் காலமானார். கோல்கட்டாவின் கலை காதலன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X