திருத்தணி:திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீ மிதி விழாவில் நேற்று, அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி விழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மஹாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது. மேலும், உற்சவர் அம்மன், வாகனத்தில் எழுந்தருளி, கிராமம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று, அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், 30 அடி உயரமுள்ள பனை மரம் நட்டு, படிகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து அர்ஜுனன், தவம் புரிவதற்காக பனை மரத்தில் ஏறிச் சென்றார். பின் தவம் புரிந்து, வரம் பெற்றார். இந்நிகழ்ச்சியில், திரளான பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளை காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement