திருத்தணி:திருத்தணி அருகே சாலை விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 46. கட்டட மேஸ்திரி. இவரின் மகன்கள்,பிரசன்னா, 18, காமேஸ்வரன், 16. ஆற்காடுகுப்பம் அரசினர் மேனிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். காமேஸ்வரன். நேற்று முன்தினம், அண்ணன் பிரசன்னாவுடன் திருத்தணி பொதட்டூர்பேட்டை கூட்டுச் சாலைக்கு வந்தார்.
அங்கு, பிரசன்னாவை விட்டுவிட்டு, அதே வாகனத்தில்காமேஸ்வரன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சித்துார் சாலையில், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், காமேஸ்வரன் பலத்த காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காமேஸ்வரனின் பெற்றோர், இறந்த தன் மகனின், இதயம், சிறுநீரகம், உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து, மருத்துவரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் உடல் உறுப்புகள் எடுத்து சேமித்து, தேவைப்படுவோருக்கு வழங்க முன்வந்தனர்.விபத்தில் மகன் இறந்த துக்கத்தை தாங்கி, அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய முன்வந்ததை, மருத்துவமனையில் இருந்த சகநோயாளிகள் பாராட்டினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement