குப்பை கழிவுகள் எரிப்புவாகன ஓட்டிகள் அவதி
மதுராந்தகம் நகராட்சி, 13வது வார்டு சின்ன காலனி செல்லும் வழியில், குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இக்குப்பை கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் தீயிட்டு எரிக்கின்றனர்.இதிலிருந்து வெளியேறும் புகை, சாலை வரை பரவி, வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுத்துகிறது. சில சமயம், அதிகமாக எழும் புகையால் வாகனங்கள் எதிரே வருவது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.தாசில்தார் அலுவலகம் அருகே நடக்கும் இச்செயலை, நகராட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்த வேண்டும்; குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
ச.ரகு, சமூக ஆர்வலர், மதுராந்தகம்.
பூட்டி கிடக்கும் கழிப்பறைதிறந்தால் மக்களுக்கு நல்லது
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே, பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, பல மாதங்களாக பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது.இதனால், பேருந்து நிலையம் வரும் மாற்றுத்திறனாளிகள், அவ்வப்போது அந்த கழிப்பறையை பயன்படுத்தும் பொதுமக்கள், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள், கழிப்பறை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
வே.கவுதமன், அச்சிறுப்பாக்கம்.
ரயில்வே கேட் சாலையில்
பள்ளம் இருப்பதால் சிரமம்பாலுார் -- கண்டிகை போக்குவரத்து பிரதான நெடுஞ்சாலை பாலுாரில், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ரயில்வே கேட் உள்ளது. தினம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக லாரி வாகனங்கள் அதிகமாக செல்கின்றன.ரயில்வே கேட் பகுதியை ஒட்டி, பெரிய அளவில் பள்ளம் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் அடிக்கடி சிக்கி, விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதோடு, கனரக வாகனங்களால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும். இவ்வழியே செல்லும் கனரக லாரிகளை மாற்று பாதையில் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொ.பிரியதர்ஷன், பாலுார், செங்கல்பட்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE